வைகோவுடன் பேசி வருகிறேன்: காளிமுத்து
வேலூர்:
திமுக தலைவர் கருணாநிதியின் ராசியில் சனி பிடித்து விட்டது. இனிமேல் அவருக்கு தோல்விமுகம்தான் என்று அதிமுக அவைத்தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.
வேலூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் காளிமுத்து பேசியதாவது:இத்தனை நாள் நான் யாழ் மீட்டியபடி (சபாநாயகர் பதவி) இருந்தேன். யாழை மீட்டியது போதும் வேல் பிடிக்க (அவைத்தலைவர்) வா என்று கூறி என்னிடம் வேலைக் கொடுத்து பிரசாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் அம்மா.
கருணாநிதி கடந்த முறை ஐந்து ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அப்போது என்ன செய்தார்.? அம்மா மீது வழக்குப்போடுவதிலேயே காலத்தைக் கழித்தார். அவரது பெயரில்தான் நிதி உள்ளது. ஆனால் ஆட்சியை விட்டு அவர் போனபோதுகஜானா காலியாகவே இருந்தது. போகும்போது காலி செய்து விட்டுப் போய் விட்டார்.
ஆனால் அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் மோசமான நிதி நிலையை சரி செய்தார், சுனாமி, மழை, வெள்ள பாதிப்புகள்ஏற்பட்டபோது திறம்பட சமாளித்து நவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடித்தார். எல்லாத் துறைகளிலும் முத்திரைபதித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்களும் என்ன செய்தார்கள். எந்தத் திட்டம் தமிழகத்துக்கு வராதபடி முட்டுக்கட்டைபோட்டனர். நிதி அமைச்சர் சிதம்பரம், தமிழகத்துக்கு எந்த நிதியும் வராமல் சதி செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தலைப் போல இப்போதும் அப்படியே ஜெயித்து விடலாம் என நினைக்கிறார் கருணாநிதி. ஆனால்கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் கதிதான் அவர்களுக்கு நேரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது கருணாநிதி ராசியில் சனி. இனி அவருக்கு தோல்விமுகம்தான்.
கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் அம்மா. அப்படியென்றால், திருடன் வந்தாலும் சமாளிப்பேன்,விருந்தாளி வந்தாலும் சமாளிப்பேன் என்று அர்த்தம்.
ஆனால் கருணாநிதியோ, யாரும் வீட்டை விட்டு ஓடிவிடக் கூடாது என்பதற்காக கதவுகளைப் பூட்டியே வைத்திருக்கிறார். வீட்டில்இருப்போர் (கூட்டணிக் கட்சிகள்) மீது அவ்வளவு நம்பிக்கை அவருக்கு.
வெள்ளரிப் பழத்தை வெள்ளிப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்தாலும் அது வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.அதுபோலத்தான் திமுக கூட்டணியின் கதையும். அது உடைவதை யாராலும் தடுக்க முடியாது.
யார், யார் அம்மாவுடன் கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டுள்ளனர், யார் யாரெல்லாம் அம்மாவின் பின்னால் அணி வகுக்கப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வரும். வைகோ என்னிடம் அடிக்கடி பேசுவார். ஏன், நேற்று கூட பேசினாரே.
கருத்துக் கணிப்பு என்பது வானிலை அறிக்கை போன்றது. அவ்வப்போது மாறக் கூடியதாகும். இப்போது திமுக பக்கம் புயல் வீசிக்கொண்டுள்ளது. அதில் சிக்கி மாண்டுபோகாமல் தப்பிக்க பாதுகாப்பான (அதிமுக) இடத்துக்கு வாருங்கள் என்று திமுககூட்டணியினரை வேண்டிக் கொள்கிறேன்.
சிங்கம் வெகு தூரம் நடந்து சென்று திரும்பிப் பார்க்கும். இனி போக வேண்டிய தூரம் அதிகம் இல்லை என்று நினைத்துக்கொள்ளும். மீண்டும் தனது பயணத்தைத் தொடரும். அதுபோலத்தான் அதிமுகவும்.
2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்டால் நிரந்தரமாக இனி அதிமுக ஆட்சிதான். திமுகவின் கதைஅத்தோடு காலி என்றார் காளிமுத்து.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications