என்ன பண்ணலாம்? ம.த.தே தீவிர ஆலோசனை
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உத்திகள், கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பான பல்வேறு தேர்தல் தொடர்பான விஷயங்களை ஆலோசிக்க மக்கள் தமிழ் தேசம் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை தொடங்கி 20ம் தேதி வரை நநிடைபெறவுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உதித்த கட்சி மக்கள் தமிழ் தேசம். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் மிக முக்கிய இலாகாக்களை வகித்த முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பனின் கட்சி இது.கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தார் ராஜ.கண்ணப்பன். இளையாங்குடியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் அவர்.
இந்தத் தேர்தலிலும் திமுகவுடனேயே கூட்டணி அமைக்க கண்ணப்பன் முடிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த முறை எத்தனை சீட் கிடைக்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை.
கண்டிப்பாக ஒரு சீட் கிடைக்கும் என்று கூறப்பட்டாலும் கூட கூடுதல் சீட்களைக் கேட்டுப் பெற (கிடைக்காது என்றாலும் கூட) கண்ணப்பன் கட்சி முடிவு செய்துள்ளது.
இந் நிலையில் தேர்தல் உத்திகள் தொடர்பாக விவாதிக்க கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கண்ணப்பன் சென்னையில் நாளை கூட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கண்ணப்பன் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 20ம் தேதி வரை இக்கூட்டம் நடைபெறும்.
மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
முதல் நாளான நாளை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன்கண்ணப்பன் ஆலோசனை நடத்துகிறார்.
கட்சிக்குவெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டறிந்து, பட்டியல் தயாரித்து அதை வைத்து திமுகவிடம்தொகுதிகளைக் கேட்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications