இளைஞர் காங் தலைவராகும் கார்த்திக் சிதம்பரம்?
சென்னை:
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் நியமிக்கப்படக் கூடும் எனதெரிகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஓரிரு நாட்களில் அப்பொறுப்பிலிருந்து விலக்கப்படவுள்ளார். அவருக்குப் பதில்,முன்னாள் எம்.பியும், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவருமான வந்தவாசி கிருஷ்ணசாமி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள்வெளியாகின்றன.கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத் தற்போது தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். ஒரே நேரத்தில்தந்தையும், மகனும், கட்சியின் உயர் பொறுப்புகளில் இருப்பது சரியல்ல என்பதால் விஷ்ணு பிரசாத் அப்பொறுப்பிலிருந்துமாற்றப்படவுள்ளார்.
விஷ்ணுபிரசாத்துக்குப் பதில் புதிதாக நியமிக்கப்படவுள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் பதவியை தனக்கு மகனுக்குத் தர ப.சிதம்ரம், தனது மகனுக்கு வாங்கித் தர ஈவிகேஸ் இளங்கோவன் உள்ளிட்டோர்தீவிரமாக முயன்று வருகின்றனர்.
அனேகமாக இப்பதவியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் நியமிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
ப.சிதம்பரத்தின் வழியில் அரசியலில் ஈடுபட்டு வரும் கார்த்திக் சிதம்பரம், அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச்சென்று கட்சிக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
தனது தந்தையின் மக்களவைத் தொகுதியான சிவகங்கையை கவனித்து வரும் கார்த்திக், அப்படியே வரும் சட்டமன்றத் தேர்தலில்காரைக்குடி தொகுதியில் போட்டியிட முயன்று வருகிறார்.
இந் நிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி கார்த்தி சிதம்பரத்திற்கு கிடைக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளதாகக்கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications