பிளஸ் டூ தேர்வுக்கான வினாத் தாள்கள் ரெடி!
சென்னை:
மார்ச் 2ம் தேதி தொடங்கும் பிளஸ் டூ தேர்வுக்கான வினாத் தாள்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்டு விட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுத்த வாரம் இந்த கேள்வித் தாள்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.பிளஸ் டூ தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.தேர்வுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளி மாநில அச்சகங்களில் இவை அச்சிடப்பட்டன.
அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. கேள்வித் தாள்கள் வைத்திருக்கும் அறையைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அலுவலக வளாகத்திற்குச் செல்லும் பெரிய நுழைவாயில் மூடப்பட்டு விட்டது. சிறிய வாயில் வழியாகத்தான் பார்வையாளர்கள், அலுவலர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
சீல வைக்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கட்டுக்கள் அடுத்த வாரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications