காதலர் தினத்தை எதிர்த்து பாமக போராட்டம்
சென்னை:
இன்று நடக்கும் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு எதையும் சென்னை காவல்துறை விதிக்கவில்லை.இருப்பினும் காதலர்கள் பொது இடங்களில் எல்லை மீறாமல் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் நடராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் காதலர் தினத்தைக் கொண்டாட சிவசேனா உள்ளிட்ட சிலஅமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வன்றையில் ஈடுபட்டுள்ளனர்.காதலர்களைப் பார்த்தால் அவர்களை கழுதையில் ஏற்றி மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்துச் செல்வோம் என்று சிவசேனாஎச்சரித்துள்ளது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சில இந்துத்துவா அமைப்புகள் இன்னும் ஒருபடி மேலே போய், ரோட்டில் காதலர்களைக்கண்டால் அவர்களைப் பிடித்து கல்யாணம் செய்து வைப்போம் என்று கூறியுள்ளன.
இதனால் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் போலீஸார் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் தமிழகத்தில் இதுவரை இதுபோன்ற பிரச்சினை எதுவும் ஏற்பட்டதில்லை.
பாமக, சிவசேனா போராட்டம்:
ஆனால், இப்போது காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்த்து சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் பாமக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தின.
சென்னையில் சிவசேனா கட்சி சார்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள நட்சத்திர ஹோட்டல்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதேபோல சேலத்தில், தலைமைத் தபால் நிலையம் முன் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காதலர் தினம் கலாச்சார சீரழிவின் அடையாளம். அதை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று போராட்டத்திற்குத் தலைமை வகித்த பு.தா.அருள் கூறினார்.
இதற்கிடையே சென்னை, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் காதலர் தினத்தை காதலர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர்.
சென்னையில் மெரீனா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காதலர்கள் கூட்டம்அதிக அளவு இருப்பதாலும், அவர்களிடம் சில்மிஷம் செய்ய காதலி-காதலன் கிடைக்காத கும்பல்கள் அலையும் வாய்ப்புஉள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்பட்டுள்ளதா என்று மாநகர காவல் ஆணையர் நடராஜிடம்கேட்டபோது,
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இருப்பினும் பொது இடங்களில் காதலர்கள் வரம்பு மீறாமல், எல்லை மீறாமல் அன்பைப்பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அழகான வேண்டுகோள் வைத்தார் கமிஷ்னர் நடராஜ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications