கதவு திறந்து கூவும் ஜெயலலிதா: அன்பழகன்
விழுப்புரம்:
தமிழகத்தில் தமிழும், தமிழர்களும் வாழ வேண்டும் என்றால் கருணாநிதியே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசுகையில், முரண்பாடுகளின் மொத்த உருவம் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில், பேச ஆள் வேண்டுமே என்பதற்காக காளிமுத்துவின் சபாநாயகர் பதவியைப் பறித்து விட்டு அவரை அவைத் தலைவராக்கியுள்ளார்.மக்களுடன் தான் எனது கூட்டணி, வேறு யாரும் வேண்டாம் என்று முழங்கி வந்தார் ஜெயலலிதா. 7 கட்சிக் கூட்டணி என்று கிண்டலடித்தார். ஆனால், இப்போது கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன, வாருங்கள், வாருங்கள் என்று கூவி வருகிறார். ஆனால் வருவதற்குத்தான் யாரையும் காணோம்.
திமுக கூட்டணியில் உள்ள வைகோ, வாசன், வரதராஜன், நல்லகண்ணு போன்றோர் அதிமுகவின் அழைப்பை எதிர்பார்த்திருப்பதாக வதந்திகள் பரப்புகிறார்கள். ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட தலைவர்கள் அல்ல.
கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவதை சில ஆதிக்க சக்திகள் எதிர்க்கின்றன. ஜெயலலிதா என்ன தவறு செய்தாலும் அதை சில பத்திரிக்கைகள் பெரிதுபடுத்துவதில்லை. தொடர்ந்து திமுக கூட்டணிக்கு எதிரான செய்திகளையே பெரிதுபடுத்துகிறார்கள்.
தமிழகத்தில் தமிழும், தமிழர்களும் வாழ வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி கருணாநிதியே மீண்டும் முதல்வராக வேண்டும் என்றார் அன்பழகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications