மீண்டும் போலி வாக்காளர் சேர்க்கை: திமுக
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் போலி வாக்காளர்களைச் சேர்க்க அதிமுக முயற்சி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் 13 லட்சம் போலி வாக்காளர்களை அமைச்சர்களும், அதிமுக மாவட்டச் செயலாளர்களும் வாக்காளர்பட்டியலில் சேர்த்து பெரும் ஜனநாயக சாதனை படைத்தனர். இவர்கள் மீதும் போட்டியாக போலி வாக்களர்களைச் சேர்த்ததிமுகவினர் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன.இந் நிலையில் மீண்டும் போலி வாக்காளர்களை சேர்க்கும் வேலையில் அதிமுகவினர் இறங்கியுள்ளதாக மத்திய தேர்தல்ஆணையருக்கு கருணாநிதி அவசர புகார் கடிதம் அனுப்பியுள்ளார். தனது கடிதத்தில்,
கடந்த முறை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கும் அவகாசத்தின் கடைசி நாளில் லட்சக்கணக்கான படிவங்கள்சமர்பிக்கப்பட்டன. அந்த போலி வாக்காளர் விவரத்தை நான் அனுப்பி வைத்ததால் அந்தப் படிவங்களை நிராகரித்தீர்கள்.
இந்த முறை வாக்காளர் விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாளான 12ம் தேதி கோவை மாவட்டத்தில் மட்டும் 1.4 லட்சம்விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இந்தச் செயல்களுக்கு மாட்ட அதிகாரிகளும் உடந்தையாகஇருந்துள்ளனர்.
இதே போல தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் போலி வாக்காளர் படிவ சேர்க்கை நடந்துள்ளது. தமிழகத்தில் நடக்கும்இந்த சட்டத்துக்குப் புறம்பான காரியங்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
கடந்த முறை போலி வாக்காளர்களைச் சேர்க்க முயன்ற அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தேர்தல்கமிஷன் அறிவித்தும் கூட தமிழகத்தில் அமைச்சர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் தான் மீண்டும் அதே தவறு நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications