ஆர்த்தி சீரியஸ்! மீண்டும் தற்கொலை முயற்சி?
பிரபல தெலுங்கு, தமிழ் நடிகை ஆர்த்தி அகர்வால் தலையில் பலத்த அடிபட்டு கவலைக்கிடமான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை மெல்ல தேறி வருகிறது. அவர் மீண்டும்தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்குபவர் ஆர்த்தி அகர்வால். தமிழிலும் ராஜா, வின்னர், பம்பரக் கண்ணாலேஉள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில காலத்திற்கு முன்பு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தூக்கமாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார் ஆர்த்தி அகர்வால். அதிலிருந்து காப்பாற்றப்பட்டார்.
இந் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தலையில்ரத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ஆர்த்தியின் பெற்றோர் ஹைதராபாத்துக்கு நேற்று முன்தினம் இரவுவந்தனர். பின்னர் ஆர்த்தி, அவரது தங்கை அதிதி மற்றும் பெற்றோர் இரவு சாப்பாட்டுக்காக வெளியில் சென்றனர்.
இரவில் அவர்கள் ஆர்த்தி தங்கியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக்குத் திரும்பினர். அப்போது லிப்ட் வேலைசெய்யாததால், 6வது மாடிக்கு நடந்தே சென்றனர். அப்போது மாடிப்படியில் கால் தவறி விழுந்தார் ஆர்த்தி. இதில்அவரது பின்னந்தலையில் அடிபட்டது.
லேசான அடிதானே என்று நினைத்து வலி நிவாரண மாத்திரைககளைக் கொடுத்தனர். ஆனால் காலை 11மணியாகியும் ஆர்த்தி எழுந்திருக்காததால், பயந்து போன அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு கவலைக்கிடமான நிலையில் ஆர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கோமாவில்இருப்பதாகவும் 24 மணி நேரம் கழித்துத்தான் எதையும் சொல்ல முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு குடும்பத்தினர் கூறினாலும் சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளிகள் முரண்பாடானதகவலைக் கூறுகின்றனர். அவர்கள் கூறுகையில்,
லிப்ட் எல்லாம் நன்றாகத்தான் வேலை செய்தது. இரவு சாப்பாட்டுக்கு ஆர்த்தி அகர்வால் போகவே இல்லை. அவர்வீட்டிலேயேதான் தங்கியிருந்தார் என்று அந்தக் காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.
இப்போது மிக மெதுவாக தேறி வரும் ஆர்த்தி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது மூளையில் ரத்தம்உறைந்திருந்தது. மேலும் கால், கழுத்து எலும்புகளும் உடைந்திருந்தன. இதையடுத்து கோமா நிலையில் உள்ளஅவருக்கு செயற்கையான சுவாசம் தான் அளிக்கப்படுகிறது. மூளையில் உறைந்திருந்த ரத்தம் அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்பட்டது. காலில் ஸ்டீல் தகடுகள் பொறுத்தப்பட்டுள்ளன.
கழுத்து எலும்பு உடைந்ததற்கு கட்டு போடப்பட்டுள்ளது.
இதனால், ஆர்த்தி அகர்வாலுக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.அவர் மாடியில் இருந்து குதித்து மீண்டும் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் அல்லது சண்டையில் அவரை மாடியில்இருந்து யாராவது படியில் தள்ளிவிட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
சம்பவம் நடப்பதற்கு முன் ஆர்த்திக்கும் அவரது தாயாருக்கும் கடும் வாக்குவாதம் நடந்ததாக அண்டை வீட்டினர்போலீசிடம் கூறியுள்ளனர்.
இதற்கிடையே ஆர்த்தி அகர்வாலை தெலுங்குத் திரையுலகின் முக்கிய புள்ளிகள் போய்ப் பார்க்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications