கேபிள் டிவி: கவர்னருக்கு எதிராக அதிமுக வழக்கு
சென்னை:
கேபிள் டிவிக்களை கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிஅதிமுக எம்எல்ஏவான சேகர் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏ சேகர் பாபு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,தமிழக மக்கள் குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசுசமீபத்தில் கேபிள் டிவிக்களை கையப்படுத்தும் மசோதாவைக் கொண்டு வந்தது. சட்டசபையில் அந்த மசோதாநிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்,இதுவரை கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த விஷயத்தில் ஆளுநர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டுள்ளார்.
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் 10 மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில் 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்ட கவர்னர் கேபிள் டிவி சட்டத்துக்கு மட்டும்ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.
இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட உடனேயே திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய மந்திரி தயாநிதிமாறனும் அவசர, அவசரமாக ஆளுநரை சந்தித்து பேசியதாகவும், ஆளுநருடன் இதுவரை 5 முறை தயாநிதி மாறன்பேசியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் எம்எஸ்ஓ உரிமையை மாறனும் அவரதுகுடும்பத்தினரும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பல ஊர்களில் அவர்களது எம்எஸ்ஓ அவர்களதுஏகபோக உரிமையாக உள்ளது.
இதனால் மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், ஏழை,எளியவர்களும் டிவி சேனல்களை தெளிவாகப் பார்க்க தமிழக அரசு கேபிள் டிவி கையகப்படுத்தும் மசோதாவைக்கொண்டு வந்தது.
எனவே இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை திருப்பி அனுப்பவேண்டும். அதையும் செய்யாவிட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கேபிள் டிவியை கையகப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதையெல்லாம் கவர்னர் ஆராயமுடியாது. எனவே இதற்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக வழக்குத் தொடர எனக்கு முழு உரிமை உள்ளது. ஏனெனில், இந்த மசோதாவுக்குஆதரவாக நான் சட்டசபையில் வாக்களித்துள்ளேன்.
இந்த மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications