திண்டிவனத்தின் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ்!
சென்னை:
அதிமுக பின்னணியுடன் புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் திண்டிவனம் ராமமூர்த்தி. அதற்கு தமிழ்நாடு இந்திராகாங்கிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கட்சி திங்கள்கிழமை முறைப்படி தொடங்கப்படும்.
கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்து நாளையே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.காங்கிரஸ் கட்சியில் போர்க்கொடி உயர்த்திய திண்டிவனம் சில நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இதை எதிர்பார்த்திருந்த திண்டிவனம் தற்போது புதிய கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கைகளில்மும்முரமாகியுள்ளார்.
கேரளாவில் முன்னாள் முதல்வர் கருணாகரன் தொடங்கியுள்ள ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சியின்அடியொற்றி தமிழகத்திலும் அதே பெயரில் கட்சியைத் தொடங்குகிறார் திண்டிவனம். தனது கட்சிக்கு தமிழ்நாடுஇந்திரா காங்கிரஸ் என்று அவர் பெயர் வைத்துள்ளதாக தெரிகிறது. கட்சிப் பெயர் குறித்தும், கொடி குறித்தும்திங்கள்கிழமை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
திங்கள்கிழமை மாலை சென்னை சவேரா ஹோட்டலில் மாலை 4 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன்திண்டிவனம் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கட்சியின் பெயர், கொடி ஆகியவைகுறித்து அறிவிக்கவுள்ளார்.
கட்சியின் பெயராக தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் அல்லது இந்திரா காமராஜர் தேசிய காங்கிரஸ் என்ற பெயரில்ஒன்று வைக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. கட்சிக் கொடியில் காமராஜர் உருவம் இடம்பெறும் எனவும்தெரிகிறது.
புதிய கட்சியைத் தொடங்கியவுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பானபேச்சுவார்த்தைகளை முறைப்படி திண்டிவனம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கிடையே, திண்டிவனம் ராமமூர்த்திக்கு பல முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே ஆதரவுதெரிவித்துள்ள நிலையில் சில எம்.எல்.ஏக்கள் (நான்கு பேர் எனத் தெரிகிறது) ஆதரவு தருவதாகதிண்டிவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படும் எனத் தெரிகிறது.
தனக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்கள் யார் என்பதை இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும்போதுதெரிவிப்பேன் என திண்டிவனம் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆதரவாளர்களை வாசனின் ஆதரவாளர்கள்தாக்கி வருவதாகவும், இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications