இந்தியாவில் பறவைக் காய்ச்சல்!: ஒருவர் பலி!! -மகாராஷ்டிரத்தில் 50,000 கோழிகள் சாவு!!!
அகமதாபாத்:
மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள பரபரப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத்தில் பறவைக்காய்ச்சல் காரணமாக ஒரு கோழிப் பண்ணை உரிமையாளர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் தாடங்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கி, பெரும் உயிர்ச் சேதத்தைஏற்படுத்திய பறவைக் காய்ச்சல் தற்போது இந்தியாவுக்கும் பரவியுள்ளது. தென் கிழக்குஆசிய நாடுகள் தவிர துருக்கி, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிலும் பறவைக் காய்ச்சல்பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் துலே, நந்துர்பர் ஆகிய இரு மாவட்டங்களில்பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது. இதில் 50,000க்கும் மேற்பட்ட கோழிகள்இறந்துள்ளன. நந்துர்பர் மாவட்டம் மலைவாழ் மக்கள் அதிகம் வாழும்மாவட்டமாகும். இங்குள்ள கோழிப் பண்ணைகளில் கோழிகள் மொத்தமாக இறந்தன.இதையடுத்து கால்நடைத் துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.
இறந்த கோழிகளின் உடல் பாகங்கள், போபாலில் உள்ள அரசு ஆய்வகத்திற்குஅனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அதில், பறவைக் காய்ச்சல் வைரஸ்தாக்கியதால்தான் இந்த கோழிகள் இறந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து மகாராஷ்டிரமாநில கால்நடைத்துறை அமைச்சர் அனீஸ் அகமது கூறுகையில், கழிச்சல் நோய்காரணமாக கோழிகள் இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. ஆனால்சோதனையின் முடிவில் பறவைக் காய்சச்ல் எனத் தெரிய வந்துள்ளது.
தற்போது 50,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. நந்துர்பர் தவிர துலேமாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது. நோயைக் கட்டுப்படுத்தவும்,நோய் பரவுவதைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொண்ட குழு நோய் பாதித்த மாவட்டங்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தேவையான அளவுக்கு மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நோய் தாக்கிய கோழிப்பண்ணைகள் உள்ள பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைக்குகொண்டு சென்று கோழிக் கழிவுகளையும், இறந்த கோழிகளையும் கொண்டு சென்றுஅழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மகாராஷ்டிரத்தில் உள்ள தனியார் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள்அனைத்திற்கும் உடனடியாக தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. கோழிஇறைச்சியை மக்கள் சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்அமைச்சர் அகமது.
குஜராத்தில் ஒருவர் பலி:
இதற்கிடையே, குஜராத் மாநிலம் சூரத்தில் பறவைக் காய்ச்சலுக்கு கோழிப் பண்ணைஉரிமையாளர் ஒருவர் இறந்துள்ளார்.
இதுகுறித்து சூரத் மாவட்ட ஆட்சித் தலைவர் வத்சலா வாசுதேவ் கூறுகையில், சூரத்தில்கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்துள்ளார். அவர்பறவைக் காய்ச்சல் காரணமாக இறந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும்இறுதி பரிசோதனை முடிவுக்காக காத்துள்ளோம் என்றார்.
மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சலுக்கு 50,000 கோழிகள் இறந்துள்ள நிலையில்பக்கத்து மாநிலமான குஜராத்தில் உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இறந்த கோழிப்பண்ணை உரிமையாளரான கணேஷ் சொனர்கர் (வயது 27), பறவைக்காய்ச்சல் தாக்கியுள்ள மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 10 நாட்களுக்கு முன்பு சூரத் வந்துள்ளார். வந்தவுடன்அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமைஇறந்துள்ளார்.
இவர்தவிர மேலும் 8 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்குஅனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் (இவர்களில் 3 பேர் குழந்தைகள்) தீவிரக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பறவைக் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து குஜராத் மாநிலம்முழுவதும் அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் 3 லட்சம "கோழிகளை கொல்லவும், தடுப்பூசிபோடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நந்துர்பர் மாவட்டத்தில் மட்டும் 9லட்சம் கோழிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டின் பிற்பகுதியில் பரவிய பறவைக் காய்ச்சலுக்கு உலகம்முழுவதும் 171 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 93 பேர் இறந்து விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications