தமிழக கோழிகளுக்கு கேரளா தடை!
சென்னை:
மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்டபல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் கோழிகளை வாங்க கேரள அரசு தடைவிதித்துள்ளது.மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளதால், ஆந்திரா, கர்நாடகம்,தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அதிக அளவில் கோழிகள் உற்பத்தி செய்யப்படும் நாமக்கல்மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் தடுப்பூசிகள் போட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கவில்லை என்று அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும்கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டலத் தலைவர் டாக்டர்செல்வராஜ் கூறஉகையில், தமிழக வெப்ப நிலையைப் பொருத்தவரை இங்கு பறவைக்காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
கடந்த ஒரு வருடமாகவே, பறவைக் காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்குறித்து கோழிப் பண்ணையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். எனவேபயப்படத் தேவையில்லை என்றார்.
இதற்கிடையே, தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் கோழிகளை வாங்ககேரள மாநில அரசு தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளதால் அங்கு 50,000க்கும் மேற்பட்டகோழிகள் இறந்துள்ளன. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறுமாநிலங்களில் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் கோழிகளை வாங்கஅம்மாநில அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தின் நாமக்கல், தேனி, கன்னியாகுமரிமாவட்டங்களிலிருந்து அதிக அளவில் கேரளாவுக்கு கோழிகள் விற்கப்படுகின்றன.இந்தக் கோழிகளுக்கு தற்போது கேரளா தடை விதித்துள்ளது.
மேலும், தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் வளர்க்கப்படும் கோழிகளைபரிசோதிக்கவும் அம்மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications