தேர்தல்: நினைவுக்கு வந்த கும்பகோணம் பிஞ்சுகள்
கும்பகோணம்:
கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு மிகவும் தாமதமாக இப்போது நினைவாலயம் கட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 94 பள்ளிக்குழந்தைகள் உயிரிழந்தனர்.
அந்தக் கொடூரத்தின் தாக்கத்தில் பாதக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில், தங்கள்இன்னுயிரை இழந்த 94 இளந்தளிர்களின் நினைவைப் போற்றும் வகையில், தீ விபத்து நடந்த பள்ளிக்குஅருகிலேயே கும்பகோணம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் நினைவாலயம்அமைக்க நான் இப்போது ஆணையிட்டுள்ளேன்.
இந்த நினைவாலயம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
நினைவாலயம் கட்டக் கோரி குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்கள் இரு ஆண்டுகளாக கொடுத்த வந்தகுரல் தமிழக அரசின் காதில் விழவே இல்லை. இதற்காக போராட்டங்கள் கூட நடத்தப்பட்டன.
இந நிலையில் தேர்தல் வருவதையொட்டி குழந்தைகளின் நினைவ தமிழக அரசுக்கு வந்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்துக்கு கும்பகோணம் செல்லும்போது இந்தக் கோரிக்யைை முன் வைத்து எதிர்க் கட்சிகள்பிரச்சனையைக் கிளப்பலாம் என்பதால் அதைச் சமாளிக்க இந்த அவரச அறிவிப்பு வெளியாகியுள்ளதாகத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications
