மதிமுகவில் கசமுசா: வைகோ-நாஞ்சில் மோதல்?
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்துப் பேசி வந்த மதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், இனிமேல் வைகோ என்ன சொல்கிறாரோ அதன்படியேபேசுவேன் என தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதிப் பங்கீடு தொடர்பாக நாஞ்சில் சம்பத்மிகவும் காட்டமாக பேசி வந்தார். இந்த முறை ஏமாற மாட்டோம், கடந்த முறை திமுகஎங்களை வஞ்சித்து விட்டது என்ற ரீதியில் கடுமையாக விமர்சித்து வந்தார்.கருணாநிதி கோபம்:
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்திருந்தார். நாஞ்சில் சம்பத்பேச்சுக்கு வைகோ மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் அதிருப்திதெரிவித்துள்ளார்.
வைகோ வருத்தம்:
இதையடுத்து நாஞ்சில் சம்பத் பேசியது கட்சியின் கருத்து அல்ல. அவரது பேச்சுகருணாநிதியை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் வைகோஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
பின் வாங்கும் நாஞ்சில்:
இந்த நிலையில் இனிமேல் வைகோ என்ன சொல்கிறாரோ அதன் அடிப்படையில்தான்பேசுவேன் என்று சம்பத் கூறியுள்ளார். இதுகுறித்து கோவையில் அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் வாழ்க்கையில் இக்கட்டான நிலையில்உள்ளேன்.
எனது மேடைப் பேச்சுக்கள் குறித்து விளக்கம் அளிக்க வைகோவை போனில்தொடர்புகொண்டேன். இதுவரை பிடிக்க முடியவில்லை. எனது விளக்கத்தை அவரிடம்அளிப்பேன்.
எனது அரசியல் வாழ்வில் இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்ததில்லை. இனிமேல்வைகோவின் டைரக்ஷன்படியே நடப்பேன், பேசுவேன். அவரது சொல்லுக்காககாத்துள்ளேன் என்றார் சம்பத்.
திமுக கூட்டணியை விட்டும் விலகும் முடிவை எடுக்கவும் முடியாமல் தவிர்க்கவும்முடியாமல் வைகோ தத்தளித்து வருகிறார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிக சீட் கிடைக்கும், இதனால் தங்களுக்குப்போட்டியிட வாய்ப்புக்கும் கிடைக்கும் என நம்பும் அவரது கட்சியின் இரண்டாம்மட்டத் தலைவர்களும் நிர்வாகிகளும் ஜெயலலிதாவுடன் கைகோர்க்க வேண்டும் என்றுவைகோவை நிர்பந்தித்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் தொடர்ந்தால் கட்சியே உடையும் நிலை இருப்பதால் வைகோ தவித்து வருகிறார்.
ஒரு முடிவுக்கு வர முடியாமல் வைகோ காலம் தாழ்த்தி வருவதை அவரது கட்சியின் நிர்வாகிகள் மிஸ்யூஸ் செய்யஆரம்பித்துள்ளனர். திமுகவை கடுமையாக விமர்சித்து கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வேலைகளில்தீவிரமாகியுள்ளனர். இதில் முக்கிய இடம் வகிப்பது நாஞ்சில் சம்பத்தும் அவைத் தலைவர் எல்.கணேசனும் தான்.
எல்.கணேசன் சசிகலாவின் உறவினர் ஆவார். இதனால், சமூகரீதியில் சசிகலா, காளிமுத்துவுடன் அவருக்குநெருக்கம் உண்டு. இந்த நெருக்கத்தை இப்போது வெளிப்படையாகவே காட்டி திமுகவை அவர் டென்சனாக்கிவருகிறார்.
திமுகவுடன் உறவை முறிக்க வைகோ தயாராக இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவுக்கு வர அவர்மனதளவில் இன்னும் தயாராகவில்லை.
வைகோவைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் தனக்கு எதிர்காலம் இல்லை என்று கருதுகிறார். தேர்தல்நேரத்தில் தன்னைப் பயன்படுத்திவிட்டு திமுக கழற்றிவிடும் என்று நினைக்கிறார்.
நீண்டகால அடிப்படையில் பார்த்தத், ஸ்டாலினுக்கு எதிராகவே தனது எதிர்கால அரசியல் இருக்கும் என்று நம்பும்வைகோ இப்போதே திமுகவிடம் இருந்து தூரமாக செல்ல விரும்புகிறார்.
கடந்த ஜனவரியில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது, ஸ்டாலினை முதல்வராக்க மாட்டோம் என்றுஅறிவிப்பு வெளியிட வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்ததாகவும், அதை கருணாநிதி ஏற்கமறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வுவதை விட 35 இடங்கள் வரை தர தயாராக இருக்கும்அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது, திமுக கூட்டணியில் பாமகவுக்கு உள்ளதைப் போல அதிமுக கூட்டணியில்மதிமுகவுக்கு என்று ஒரு தனி இடத்தை உருவாக்குவது, அதன் மூலம் பாமகவுக்கு இணையான ஒரு முக்கியகட்சியாக மதிமுகவை தமிழக அரசியல் அரங்கில் நிலை நிறுத்துவது என்ற முடிவுக்கு வைகோ வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications