காங். அலுவலகத்தில் கோஷ்டி மோதல்-அடிதடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்த்திக் சிதம்பரம் மற்றும் செல்லக்குமாரின் ஆதரவாளர்களுக்கு இடையே இன்று சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் பயங்கரமோதல் நடந்தது.

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணசாமி இன்று காலை கட்சித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குவந்து நிருபர்களை சந்தித்தார்.

அப்போது ஏகப்பட்ட கோஷ்டிகளின் தலைவர்களும் அவர்களது ஆட்களும் கட்சி அலுவலகத்துக்குள் வந்தனர்.

வழக்கமாக வெறிச்சோடிக் காணப்படும் காங்கிரஸ் அலுவலகத்தில் சீட்களைப் பெறுவதற்காக பெரும் கூட்டம் காணப்படுகிறது.சத்தியமூர்த்தி பவன் வளாகத்தையும் தாண்டி வெளியிலும் நூற்றுக்கணக்கான கார்கள் நிற்கின்றன.

இதில் எதிரெதிர் கோஷ்டிகளுக்கு இடையே அவ்வப்போது கர்..முர் நடந்து வருகிறது.

இந் நிலையில் இன்று பேட்டியளித்து முடித்த கிருஷ்ணசாமி தனது அறைக்குள் சென்றார். அவரைத் தொடர்ந்து எல்லாகோஷ்டியினரும் அவரது அறையை மொய்த்தனர்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியைக் குறி வைத்துள்ள நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் வந்துகிருஷ்ணசாமியை சந்தித்தார். இப்போது அந்தப் பதவி கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத்திடம் உள்ளது. தனக்கு அந்தப்பதவியைப் பெற கிருஷ்ணசாமியின் உதவியை நாடி கார்த்தி அங்கு வந்தார்.

இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க முயன்று தோற்ற முன்னாள் எம்எல்ஏவும் மாஜி இளைஞர் காங்கிரஸ்தலைவருமான செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். பதவி விஷயமாக கார்த்திக் வந்ததைஅறிந்தே இவர்கள் வந்தனர்.

வந்தவர்கள் அலுவலகத்தின் வாசலில் நின்று கொண்டு டாக்டர் செல்லக்குமார் வாழ்க, வாரிசு அரசியலைப் புகுத்தாதே என்றுகிருஷ்ணசாமி-விஷ்ணு பிரசாத், சிதம்பரம்-கார்த்திக்குக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வெளியில் வந்தார். அப்போது அவரை செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுசிதம்பரத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து சிதம்பரம்-கார்த்தியின் ஆதரவாளர்கள் அங்கு வந்து செல்லக்குமார்ஆதரவாளர்களை நோக்கி எதிர்கோஷமிட்டனர்.

இந்த கோஷம் திடீரென உச்சகட்டத்துக்குப் போய் திடீரென இரு தரப்பினரும் ஒருவரை ஒரு அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.இரு தரப்பிலும் கதர் சட்டைகள் கிழிந்தன. வேட்டிகள் உருவப்பட்டன. இதையடுத்து பிற கோஷ்டிகள் வந்து தலையிட்டு இருதரப்பினரையும் விலக்கி விட்டனர்.

அப்போது கார்த்தியின் ஒருவர் மரததின் மீது ஏறி பெரிய கிளையை உடைத்துக் கொண்டு ஜாகுவார் தங்கம் மாதிரி பல்டி அடித்துதரையில் லேண்ட் ஆனார். அப்படியே கனல் கண்ணனாக உருவெடுத்து கம்பை வைத்து எதிர் கோஷ்டியை அடிக்க ஓடினார்.

இதையடுத்து செல்லகுமார் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் ஓடினர். அங்கு மேஜை, நாற்காலிகளை தூக்கிப் போட்டுசவுண்டு ஏற்படுத்தினர். கதவுகளையும் டமார் டமார் என அடித்தனர். பின்னர் கிருஷ்ணசாமியின் அறைக்குள் புக முயன்றனர்.

இதையெல்லாம் எதிர்பார்த்தே வந்த கிருஷ்ணசாமி தனது ஆட்களை கதவருகே நிறுத்தியிருந்தார். அவர்கள் செல்லகுமார்ஆட்களை தடுத்து நிறுத்தியதோடு, அமைதியா இருங்க.. தலைவர் உங்க கூட பேசுவார் என்றனர்.

மீறி உள்ளே நுழைய முடியாமல் தடுத்தனர். இதையடுத்து செல்லகுமாரின் ஆட்கள் வெளியில் வந்தனர். இதைத் தொடர்ந்துசிரித்த முகத்துடன் கிருஷ்ணசாமி வெளியில் வந்தார். அப்போது அவரிடம் செல்லகுமாரின் ஆட்கள் ஒரு மனுவைத் தந்தனர்.

அதில்,

கட்சிக்காக களத்தில் நின்று போராடியவர்களைத் தான் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும். தலைவர்களின்வாரிசுகளுக்கு பதவிகள் தரக் கூடாது.

தொண்டர்களின் உழைப்பை சுரண்டிய அப்பாக்கள், மகன்கள் கட்சிப் பதவிகளை பிடிக்க நினைத்தால் தொண்டர்களிடம்அவர்களை அடையாளம் காட்டுவோம் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+