சென்னை: காஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
சென்னை:
சென்னை முகப்பேர் பகுதியில் வீட்டில் காஸ் கசிவு ஏற்பட்டு ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர், 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
முகப்பேர் மேற்கு, 2வது பிளாக் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர்பார்த்தசாரதி. சென்னை துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு மோகன்,திலீப் என்ற இரு மகன்கள் உள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை இரவு அனைவரும் தூங்கினர். தூங்கப் போகும் முன்பாக காஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரைசரியாக மூடவில்லை எனத் தெரிகிறது. இதனால் காஸ் கசிந்து சமையலறை மற்றும் படுக்கை அறை முழுவதும்பரவியுள்ளது.
நள்ளிரவுக்கு மேல் கழிப்பறை செல்வதற்காக மோகன் எழுந்துள்ளார். அப்போது காஸ் வாசனையை நுகர்ந்த அவர்என்னவென்று பார்ப்பதற்காக விளக்கு ஸ்விட்சைப் போட்டுள்ளார். இதையடுத்து குபீர் என தீப்பிடித்துக்கொண்டது. சிலிண்டரும் வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் பார்த்தசாரதியின் வீடே இடிந்து தரைமட்டமானது. அத்தோடு அருகில் இருந்த 4 வீடுகளும் முற்றிலும்இடிந்து சேதமடைந்தன. இதில் மோகன், திலீப் ஆகிய இருவரும் தீயில் கருகி, இடிபாடுகளில் சிக்கி இறந்தனர்.பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜனார்த்தன், அவரது மனைவி பிரேமாவதி ஆகியோர் சுவர் விழுந்து இடிபாடுகளில்சிக்கி இறந்தனர்.
பார்த்தசாரதி, நிர்மலா, சுகுமார், அவரது மனைவி அம்பிகா, அவர்களது மகன் ஸ்ரீகுமார், கார்த்திக், மஞ்சு, கண்ணன்,செல்வம், அய்யனார் மற்றும் அடையாளம் தெரியாத இன்னொருவர் என 11 பேர் இடிபாடுகளில் சிக்கிகாயமடைந்தனர்.
இவர்களில் அம்பிகா உள்ளிட்ட 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நள்ளிரவில் நடந்த இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ந்தது. நிலநடுக்கம் என பயந்து பலர் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications