கலவை மடத்தில் கர்ப்பமான பெண்!
சென்னை:
வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் வேலை பார்த்த ஒரு பெண் முறைகேடாக கர்ப்பமாகி,குழந்தையும் பெற்றுள்ளார். அவரை மடத்தில் பணியாற்றும ஒருவரே கர்ப்பமாக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் இப்போது காஞ்சி மட வழக்குகளை விசாரிக்கும் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன்டீமிடம் போயுள்ளது.கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பிராமணப் பெண் கலவை மடத்தில் சமையல் வேலை பார்த்து வந்தார். இந் நிலையில்அவர் கர்ப்பமானார். அவரை அங்கு வேலை பார்க்கும் ஒருவரே கர்ப்பிணியாக்கியதாகத் தெரிகிறது.
இது குறித்து ஜெயேந்திரரிடம் அந்தப் பெண் புகார் கூறியதாகவும், யார் கர்ப்பம், யார் கர்ப்பமில்லைன்னுபார்க்கிறது தான் என் வேலையா என்று விவகாரத்தை கைகழுவினாராம் ஜெயேந்திரர்.
இந் நிலையில் குழந்தையும் பெற்றுவிட்ட அந்தப் பெண், புகாரை காஞ்சி மட வழக்குகளை விசாரிக்கும் போலீஸ்டீமின் பார்வைக்குக் கொண்டு சென்றுவிட்டார்.
தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஜெயேந்திரர் ஏதாவது வாய் திறந்தால், இந்த வழக்கிலும்ஜெயேந்திரர் இழுத்துவிடப் படலாம் என்று தெரிகிறது. இதனால் பயங்கர டென்சனில் இருக்கிறாராம்சங்கராச்சாரியார்.
கை விலங்குடன் ஜெயேந்திரர்:
இந் நிலையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே அதிமுகவினர் வைத்துள்ள தேர்தல் விளம்பர தட்டியில்ஜெயேந்திரர் கை விலங்குடன் இருப்பது போல படம் வரையப்பட்டுள்ளது. ஜெயேந்திரரைக் கைது செய்த முதல்வர்ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டி இந்த விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
பாஜக தேசிய துணைச் செயலாளர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயேந்திரர் எப்போதுமேவிலங்கிடப்படவில்லை. ஆனால், இந்து மதத்தின் முக்கிய துறவியை இழிவுபடுத்தும் வகையில் இந்த விளம்பரத்தைவைத்துள்ள அதிமுகவினர் தங்களது விலங்கு குணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த விளம்பரத்தை தமிழக அரசு உடனே அப்புறப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் இதனால் ஏற்படும்விளைவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications