மதுவுக்கு மயங்கும் தொண்டர்கள்-கேப்டன் எரிச்சல்
சேலம்:
தனது கட்சி தொண்டர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து பாமக மயக்குவதாக தேமுதிகதலைவர் விஜய்காந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மேச்சேரி பகுதியில் விஜய்காந்தின் வேன் பிரச்சாரத்துக்கு வந்தபோதுபாமகவினர் அங்கு வந்து தங்களது கொடியை ஆட்டினர். வேனுக்கு முன் நின்றுகொடியைக் காட்டி விஜயகாந்துக்கு எதிராக கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாமகவினருக்கு எதிராக விஜய்காந்த் ரசிகர்கள்ஏதும் செய்யாமல் அமைதி காத்தனர். இதையடுத்து போலீசார் வந்து விஜய்காந்தின்வேனுக்கு முன் தங்கள் வேனை நிறுத்தினர்.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஆவேசமாகக் கிளம்பிச் சென்ற விஜய்காந்த்சிறிது தூரத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
என்னையும் எனது கட்சியின் வளர்ச்சியையும் கண்டு சிலர் (பாமக?)பயப்படுகிறார்கள். அவர்கள் நேருக்கு நேர் மோதாமல் பின்னால் நின்றுமோதுகிறார்கள் (அதான், நேராகவே வந்து கொடியை ஆட்டினார்களே).
என் கட்சித் தொண்டர்கள் வைக்கும் பேனர்கள், போஸ்டர்களை கிழிக்கிறார்கள்.கொடிக் கம்பத்தை வெட்டுகிறார்கள். இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஒருகொடி மரத்தை வெட்டினால் இன்னொரு கொடி மரம் அருகிலேயே முளைக்கும்.
என் கட்சியை தடுக்க திட்டமிட்டு தோல்வியடைந்தவர்கள் இப்போது குறுக்கு வழியில்என் கட்சியினர் சிலருக்கு இரவிலும், பகலிலும் மது வாங்கிக் கொடுத்துமயக்குகிறார்கள். அவர்களை மதுவுக்கு அடிமையாக்கி எனக்கு எதிராக திசை திருப்பிசதி செய்கிறார்கள். (கட்சியில் ஆங்காங்கே ஜாதிப் பூசலும், கோஷ்டிப் பூசலும்வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது)
எதிர்க் கட்சிகளின் சதிக்கு பலியாபவர்களை என் கட்சிக்காரர்கள் என்றே கூறமாட்டேன். அதே நேரத்தில் நேருக்கு நேர் என்னுடன் மோதிால் நானும் வேட்டியைமடித்துக் கட்ட தயார்.
மது வாங்கித் தந்து இளைஞர்களை எனக்கு எதிராக திருப்புவதாக நினைத்துஅவர்களது எதிர்காலத்தை கெடுக்கிறீர்கள். பெற்றோருக்கு கவலையைஏற்படுத்துகிறீர்கள். என்னிடம் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைதட்டிவிட்டால் போதும்.
இளைஞர்கள் மூலம் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்றார்.
விஜய்காந்தின் பேச்சையடுத்து அவர் போகும் வழியில் ஏராளமான பாமகவினர்திரண்டு வேனை மறிக்கப் பார்த்தனர். ஆனால், போலீஸ் உதவியதால்பிரச்சனையில்லாமல் சென்றார்.
விஜய்காந்த் கட்சி மட்டுமல்ல அதிமுகவினரின் பொதுக் கூட்டங்களிலும் பாமகவினர்புகுந்து விளையாடி வருகின்றனர். பல்புகளை உடைப்பது, மேடைக்கு அருகே நின்றுகொண்டு பேச்சாளர்களை கிண்டலடிப்பது என பாமகவினரின் எதிர்ப்புகளை போலீஸ்மூலமே சமாளித்து வருகின்றனர் அதிமுகவினரும் தேமுதிகவினரும்.
கேப்டனுக்கு கடலாடி:
இந் நிலையில் நடிகர் விஜயகாந்த் கடலாடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரி ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. இளைஞர் அணி விண்ணப்பம் அளித்துள்ளது.
விஜயகாந்த் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் 24ம் தேதி கடைசி நாளாகும்.
இந் நிலையில் விஜயகாந்த் போட்டியிடக் கோரி பல்வேறு தொகுதிகளுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் தே.மு.தி.க. சார்பில் கடலாடி தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடக் கோரி விண்ணப்பம் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏராளமானோர் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதிமுகவில் கடலாடி தொகுதியைத் தான் காமெடியன் செந்தில் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செந்திலின் சொந்த ஊர் இது தான்.
இந்தத் தொகுதியில் காளிமுத்து போட்டியிட்டுத் தோற்றுள்ளார். அப்போது அவர்திமுகவில் இருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications