மனைவியுடன் ஆர்.வி.உதயகுமார் அதிமுகவில்..
சென்னை:
இயக்குனர்ர் ஆர்.வி.உதயக்குமாரும், அவரது மனைவி சுஜாதாவும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில்இணைந்தனர்.
கூட்டணிக்கு வர எந்த முக்கியக் கட்சியும் தயாராக இல்லாத நிலையில் தனது அணிக்கு கிளாமரைச் சேர்க்கும்வகையில் ஒட்டுமொத்த கோலிவுட்டுக்குமாக சேர்த்து பெரிய வலையாக வீசியிருக்கிறது அதிமுக.
அதில் சினிமா வாய்ப்பு போனவர்கள் போன மீன்கள் சிக்கியும் வருகின்றன.
நடிகர்கள் விஜயக்குமார் (இவர் அதிமுகவில் சேர்ந்தது இது தேர்ட் டைம்), முரளி (இவர் மனைவி ஷோபாவோடுசேர்ந்தார்), காமெடியன் செந்தில் (இவருக்கு அதிமுகவில் இது செகண்ட் எண்ட்ரி), இயக்குனர் மனோபாலாஉள்ளிட்டோரைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ஆர்.வி.உதயக்குமாரும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சின்னக் கவுண்டர், எஜமான் போன்ற கதையம்சம் கொண்ட படங்களை எடுத்த உதயகுமாருக்கு சினிமா ரொம்பதூரமாகி ரொம்ப நளாகிவிட்டது. சமீபத்தில் லட்சுமி ராயைப் போட்டு கற்க கசடற படத்தை எடுத்தார்.
படுதோல்வி அடைந்த அந்தப் படத்துக்குப் பின் கோலிவுட்டில் உதயகுமாரை கண்டு கொள்ள ஆளில்லை. இந்நிலையில் உதயக்குமார், அவரது மனைவியும் திரைக்கதை ஆசிரியருமான சுஜாதா ஆகியோர் முதல்வர்ஜெயலிலதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
மீனா, விந்தியா, குஷ்பு ஆகியோரையும் அதிமுகவில் சேர்க்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
சூர்யா, விக்ரமிடம் அதிமுக தரப்பில் பேசப்பட்டதாகவும், சூர்யாவுக்கு அரசியல் பிடிக்காது, அவன் சினிமாலேஇப்போ தான் வளர்ற பையன், அவருக்கு இதெல்லாம் வேண்டாம் என அவரது தந்தை சிவக்குமார்கூறிவிட்டதாகவும். விக்ரமோ நான் அரசியலில் சேரும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று கூறிவிட்டதாகவும்தெரிகிறது.
இந் நிலையில் கலைமாமணி விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் சார்லி இன்று முதல்வரை அவரதுஅலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இவர்கள் தவிர, நடிகர்கள் வி.எஸ்.ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ராதாரவி, இயக்குனர் பி.வாசு,இசையமைப்பாளர் தேவா, நடிகைகள் சச்சு, ராஜ சுலோச்சனா உள்ளிட்டோரும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications