ரூ.149 கோடி செலவில் தாய்-சேய் நல திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 143.69 கோடி செலவில் தாய்-சேய் நலத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அரசின் அறிக்கை விவரம்:

முதல்வர் ஜெயலலிதா அரசின் சீரிய பணிகள் காரணமாக சுகாதார சேவை அளிப்பதில் நாட்டுக்கே முன்னோடிமாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

இந் நிலையில் தாய்-சேய் நலனைப் பேணும் வகையில் ரூ. 143.69 கோடி செலவில் பிரசவம் சார்ந்த குழந்தை நலத்திட்டத்துக்கான அடிப்படை வசதிகளை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

மேம்பட்ட சுகாதார வசதிகளை உருவாக்கவும், புதிய மருத்துவப் பிரிவுகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் இத் திட்டப்படி நகர் பகுதிகளில் கிடைப்பதைப் போலவேகிராமங்களில் வசிக்கும் ஏழை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு 24 மணி நேர அவசரகால சிகிச்சைகள், பாதுகாப்பானபிரசவம், சிசு பராமரிப்பு கிடைக்கப் பெறும் வகையில் 600 ஆரம்ப சுகாதார மையங்களில் 24 மணி நேர மகப்பேறுசேவை வசதி ஏற்படுத்தப்படும்.

இதற்காக 1,800 கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள். கூடுதலாக 600 துப்புறவுப் பணியாளர்களும்நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+