தேர்தல் குவா குவா-கட்சிகள் பிறப்பு ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாமகவில் முன்னணித் தலைவராக விளங்கி பின்னர் அதிலிருந்து பிரிந்து புதுக் கட்சி தொடங்கி சமீப காலமாகசப்தம் இன்றி இருக்கும் பேராசிரியர் தீரன் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க முடிவு செய்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் பாமகவில் ராமதாஸுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தீரன். ஆனால் காலப் போக்கில்அவருக்கும், ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்தீரன்.

கட்சியிலிருந்து பிரிந்த பின்னர் தமிழ் பாமக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார் தீரன்.ஆனால் அக்கட்சி எந்தவித வளர்ச்சியும் பெறாமல் கிணற்றில் போட்ட கல்லாக மாறி விட்டது. அவ்வப்போதுவன்னியர் அமைப்புகளின் கூட்டங்களில் கலந்து கொள்வார் தீரன். அத்தோடு சரி.

சமீப காலமாக அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். ஆனால், தேர்தல் வருவதையொட்டி சிலவன்னிய அமைப்பு தலைவர்களோடு போய் ரஜினியை சந்திக்க முயன்றார்.

ஆனால், ரஜினி மன்றத் தலைவர் சத்யநாராயணாவைத் தான் சந்திக்க முடிந்தது. அப்போது பாமக-திமுகவுக்குஎதிராக ரஜினி வாய்ஸ் தர வேண்டும் என்று தீரன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட, அதை தலைவர்கிட்டசொல்றேன் என்று சொல்லி டீ-பிஸ்கெட் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டார் சத்யநாராயணா.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது தீரன் உள்ளிட்ட வன்னிய அமைப்பினரை பாமகவுக்கு எதிராகவும்,அதிமுக-பாஜகவுக்கு ஆதரவாகவும் செயல்பட வைத்தது ரஜினி தரப்பு. அதில் ரஜினிக்கு படுதோல்வி கிடைத்தது.

இதையடுத்து பாமகவுடன் மோதுவதை விட்டுவிட்டார் ரஜினி. பாமகவும் ரஜினியை விட்டுவிட்டது. (இப்போதுவிஜய்காந்த் கிடைத்துள்ளார்)

இந் நிலையல் பழைய தோஸ்து என்ற முறையில் ரஜினி தரப்பை சந்திந்து அதிமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் கேட்டுப்போன தீரனுக்கு தோல்வி கிடைத்ததால், இப்போது புதுக் கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார் தீரன். இந்தக் கட்சிஅதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று தெரிகிறது.

கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை தீரன் வியாழக்கிழமை வெளியிடவுள்ளார்.

இதற்கிடையே, தேர்தலுக்குள் தமிழகத்தில் பல புதிய கட்சிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. பிறக்கிற இந்தக்கட்சிகளின் பின்னணியில் அதிமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தங்கள் பக்கம் பல்வேறு சமுதாய கட்சிகள்இருப்பதாக காட்டிக் கொள்ளவே இந்த கட்சி பிறப்பு வேலையில் அதிமுக மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாகவும்கூறப்படுகிறது.

வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டிவனம் ராமமூர்த்தி காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்டு இப்போது தமிழ்நாடுஇந்திரா காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். அவருக்கு அதிமுக முழு ஆதரவு தந்து வருகிறது.

இதேபோல, நாடார் சமூகப் பிரமுகர் ராக்கெட் ராஜாவும் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளார். திருநிெல்வேலிமாவட்டத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜா, சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் வலதுகரமாக திகழ்ந்தவர். பல்வேறு அடிதடி, வெட்டுக் குத்து, கட்டப் பஞ்சாயத்துக்களில் தொடர்புடையவர்,

பல்வேறு வழக்குகளில் சிக்கி நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தார்.

நெல்லை மாவட்டத்தில் முன்பு சக எதிரிகளால் கொல்லப்பட்ட கராத்தே செல்வினின் வலதுகரமாகவும் திகழ்ந்தவர்ராக்கெட் ராஜா. இப்போது இவர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குகிறார்.

அவருக்கு வெங்கடேச பண்ணையாரின் தம்பி சுபாஷ் பண்ணையார் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். வெங்கடேசபண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி திமுகவில் இருப்பதால் சுபாஷை வைத்து ராக்கெட் ராஜாவைஅரசியலுக்குக் கொண்டு வருவதில், அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் நயினார் நாகேந்திரன் முக்கியப் பங்குவகிப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் நாடார் சமதாயத்தினரின் ஒரு பகுதியினரின் வாக்குகளை அள்ளி விடலாம் என கணக்குப்போடுகிறது அதிமுக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+