சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்டபயங்கர வெடி விபத்தில் 4 பேர் இறந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசியில், பர்மா காலனி என்ற பகுதியில்உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், பட்டாசுத் தொழிற்சாலையில் பணியில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். பத்துபேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக விருதுநகர் அரசுபொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications