தேர்தல் குழு அமைத்துவிட்டார் சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சந்திரலேகா தலைமையில் ஜனதாக் கட்சியின் தேர்தல் குழுவை அமைத்துள்ளார் அதன் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி.சட்டசபைத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள், செயல்பாடுகளுக்காக 9 பேர் கொண்ட குழுவை கட்சியின் சுவாமி நியமித்துள்ளார்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் வருகிற மார்ச் 5ம் தேதி சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கூடுகிறது.
கூட்டத்தில் சுப்பிரமணியம் சுவாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
அதிமுக கைகொடுக்காவிட்டால் தனித்துவிடப்படவுள்ள பாஜகவுடன் சுவாமி கூட்டணி அமைப்பார் என்று தெரிகிறது.
குழு அமைக்கிறதெல்லாம் சரி... தேர்தல்ல போட்டியிட 234 தொகுதிக்கும் ஆள் இருக்கா? என்று கேட்கிறார்கள் பிற கட்சியினர்.












Click it and Unblock the Notifications