பாமகவில் உள் ஒதுக்கீடு: நிராகரித்தார் திருமா!
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுகவில் இடம் கிடையாது. வேண்டுமானால் பாமக தனது தொகுதிகளில் சிலவற்றை விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள் ஒதுக்கீடாக கொடுக்கலாம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கண்டித்துள்ளார்.
அந்த யோசனையை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுகவில் இடம் உண்டா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், கூட்டணியில் கட்சிகள் அதிகம் இருக்கின்றன. இதனால் தொகுதிப் பங்கீடு பிரச்சனையாக உள்ளது.
எனவே பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சிலவற்றை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கலாம். அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
கருணாநிதி இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம் இல்லை என்பது தெளிவாகி விட்டது.
அதேசமயம், பாமகவுக்கு கொடுக்கப்படும் தொகுதிகளில் சிலவற்றை விடுதலைச் சிறுத்தைகள் பெறலாம் என்று அவர் கூறியிருப்பது விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியின் கருத்து குறித்து திருமாவளவன் கூறுகையில், இந்த யோசனையை நாங்கள் ஏற்க மாட்டோம். இது எங்களை அவமதிக்கும் பேச்சு, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாமக எங்களுக்கு 20 சீட்களைக் கொடுத்தால் கூட அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
கருணாநிதியின் பேச்சு நாங்கள் எதிர்பார்த்ததுதான். எங்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று எப்போதும் நாங்கள் கோரியதில்லை. பாமகவுடன் இருக்கும் கூட்டணியில் இருப்போம் என்று மட்டுமே கூறி வந்தோம்.
எனவே கருணாநிதி இப்போது கூறியிருப்பது எங்களுக்கு அல்ல, பாமகவுக்குத்தான்.
பாமக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்து கருணாநிதி இவ்வாறு பேசுவதாக நான் கருதுகிறேன். எங்களை மட்டுமல்லாமல் பாமகவையும் சேர்த்தே அவமானப்படுத்தியுள்ளார் கருணாநிதி.
அதிமுகவில் வந்து சேருமாறு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அழைப்பும் எங்களுக்கு வரவில்லை.
இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது வெறும் சில சீட்களை ஜெயிப்பதற்காக மட்டுமல்ல. எங்களது கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
அதற்கு நாங்கள் 6 சதவீத வாக்குகளைப் பெற்றாக வேண்டும். எனவே அந்த எண்ணத்திற்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றார் திருமாவளவன்.
திருமாவளவன் கூறுவதைப் பார்க்கும்போது தனித்துப் போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
பாமக அவர்களை சமாதானப்படுத்துவதில் தோல்வியடைந்தால் கடைசி நேரத்தில் அதிமுகவுடன் திருமாவளவன் கூட்டணி அமைக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications