மறைமலை அடிகளின் பேத்திக்கு வைகோ உதவி
சென்னை:
வறுமையில் வாடி வரும் தமிழறிஞர் மறைமலை அடிகளின் பேத்தி சுந்தரத்தம்மையை சந்தித்து அவருக்கு ரூ. 25,000 நிதியுதவி அளித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
தமிழறிஞர் மறைமலை அடிகளின் பேத்தி சுந்தரத்தம்மை. இவர் மிகவும் வறுமையில் வாடி வருகிறார். இவரது கணவரும் ஒரு தமிழறிஞரே. 73 வயதாகும் சுந்தரத்தம்மையை அவரது ஒரே மகளான கலைச்செல்விதான் பார்த்துக் கொள்கிறார்.சமீபத்தில் வீட்டில் வழுக்கி விழுந்த சுந்தரத்தம்மைக்கு வைத்தியம் பார்க்கக் கூட வீட்டில் பணம் இல்லை. இதனால் கலைச்செல்வி மனம் உடைந்து இருந்தார்.
இதுகுறித்து தெரிய வந்தவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விரைந்து சென்று சுந்தரத்தம்மையைப் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் அவரிடம் ரூ. 25,000 பணத்தைக் கொடுத்து வைத்தியச் செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் சுந்தரத்தம்மையின் மகள் கலைச் செல்வியிடம் அவர் பேசினார். வைகோவுடன் மதிமுக பொருளாளர் கண்ணப்பனும் வந்திருந்தார்.
இதேபோல சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் எஸ்.ஏ.பி. வரதனும், ரூ. 51,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.
தங்களின் நிலையை அறிந்து உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி கூறுவதாக கலைச்செல்வி மனம் உருக கூறினார்.
தமிழுக்கு மகா சேவை புரிந்த மறைமலைடிகளாரின் குடும்பத்துக்கு உடனே உதவி வழங்க வேண்டியது தமிழக அரசு கடமை. கடமையைச் செய்வார்களா?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications