முத்திரைத்தாள்: அலிக்கு 3,000 பக்க சார்ஜ்ஷீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி முத்திரைத்தாள் வழக்கில் முன்னாள் டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட நான்குபேருக்கு 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் போலி முத்திரைத்தாள்களை புழக்கத்தில் விட்டது தொடர்பாக அப்துல்கரீம் டெல்கி, நிஜாமுதீன், டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சிஅதிகாரி ராமசாமி சாது உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவர்கள் மீது அண்மையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இந் நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதி தட்சிணாமூர்த்திமுன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முகம்மது அலி, சங்கர், ராமசாமி சாது, நிஜாமுதீனின் மனைவி நஸ்ரீன்ஆகியோருக்கு 3,000 பக்கங்களைக் கொண்ட குற்ரப்பத்திரிக்கை நகல்வழங்கப்பட்டது.

புனே சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்கி, நிஜாமுதீன் உள்ளிட்டோருக்கு நகல்கள்அனுப்பி வைக்கப்படும் என

சிபிஐ வழக்கறிஞர் ஜேக்கப் டேனியேல் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+