வீடு திரும்பினார் காளிமுத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து வீடு திரும்பினார்.

அதிமுக அவைத் தலைவராக பதவியேற்ற பின்னர் தீவிர பிரசாரத்தில் இறங்கினார் காளிமுத்து. இந்த நிலையில் அவரது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்த அழுத்தம் குறைந்தது.

இதனால் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

காளிமுத்துவை முதல்வர் ஜெயலலிதா, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்தனர்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த காளிமுத்து முழுக் குணம் அடைந்ததால் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

அதிமுகவுடன் மதிமுகவை கூட்டணி அமைக்க வைப்பதற்காக பிரம்மப் பிரயத்தனம் செய்தார் காளிமுத்து. வைகோவும் வந்து விடுவார் போலவே தெரிந்தது.

ஆனால், மதிமுகவுக்கு அதிகபட்சமே 25 சீட் தான் என்று அதிமுக கூறியதாலும், அதிமுக கூட்டணியை மதிமுக தொண்டர்கள் விரும்பாததாலும் அந்த முடிவைக் கைவிட்டார் வைகோ.

முன்னதாக காளிமுத்துவைப் பார்க்க ஜெயலலிதா மீண்டும் அப்பலோவுக்கு வருவது, அங்கே வைகோவையும் வரவழைப்பது, அப்போது இருவரும் சந்தித்துப் பேசுவது என அதிமுக தலைமையும் உளவுப் பிரிவும் காளிமுத்துவும் பிளான் போட்டு காய் நகர்த்தினர்.

உளவுப் பிரிவின் மூத்த அதிகாரியான சிவமயமான அதிகாரியிடம் தரப்பட்டிருந்த இந்த பிளான் பிளாப் ஆகிவிட்டது. இதனால் அவர் மீது அதிமுக தலைமை கடுப்பில் உள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+