துபாய் தாய்மண் வாசகர் வட்டம்துபாயில் திருமா

Subscribe to Oneindia Tamil

துபாய்:

துபாயில் தாய் மண் வாசகர் வட்டத்தின் சார்பில் நடக்கும் விழாவில் நாளை (24ம் தேதி, வெள்ளிக்கிழமை)விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் பேசவுள்ளார்.

செயிண்ட் மேரீஸ் சர்ச் எதிரே உள்ள ஜோர்டான் சோஷியல் கிளப்பில் மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.நிகழ்ச்சிக்கு சேரெ பட்டணம் அ.மணி தலைமை தாங்குகிறார்.

இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் இணைப் பொதுச் செயலாளர் பெ.ஆற்றலரசு, வழக்கறிஞர் அணியைச்சேர்ந்த செல்வன் சகாய், குவைத் சட்ட ஆலோசகர் அப்துல் ரசாக், அமெரிக்க கல்வியாளர் குழுமத்தின் ஜவகர்நேசன் உள்ளிட்டோரும் பேசவுள்ளனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சேரெ பட்டணம் அ.மணி, கா.முத்தமிழ்வளவன், கனியமுதன் மற்றும் குழுவினர்செய்துள்ளனர். நிகழ்ச்சி குறித்த விவரங்களுக்கு 050 55 82 677, 050 79 80 369 ஆகிய தொலைபேசி எண்களைத்தொடர்பு கொள்ளலாம்.

இந்த விழா கடந்த மாதமே நடைபெற இருந்தது. இதில் திருமாவோடு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின்பொதுச் செயலாளர் ஹைதர் அலியும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், துபாய் ஆட்சியாளர் ஷேக் மக்தூம்பின் ராஷித் அல் மக்தூம் திடீர் மறைவையடுத்து விழா ஒத்தி வைக்கப்பட்டு, இப்போது நடக்கிறது.

இந்திய சமூக மைய புதிய நிர்வாகிகள்:

அபுதாபியில் உள்ள இந்திய சமூக மையத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பின் சாகர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் ஜான் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்2001, 2004ம் ஆண்டுகளிலும் இரு முறை தலைவராக இருந்துள்ளார்.

பொதுச் செயலாளராக அனில் குமாரும், துணைத் தலைவராக கருணாகரனும், துணைச் செயலாளராக ஜான்வர்கீசும் விளையாட்டுப் பிரிவுச் செயலாளராக சந்தோசும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

(உங்கள் பகுதிகளின் நிகழ்ச்சிகளையும், பிற சம்பவங்களையும், நீங்கள் எழுதவிரும்பும் எந்த தகவலையும் வாசகர்கள் அனுப்பலாம். அவற்றை இலவசமாய்பிரசுரிக்கத் தயாராய் இருக்கிறது தட்ஸ்தமிழ். தமிழ், ஆங்கிலத்தில் உங்கள்படைப்புகளை இ-மெயில் மூலம் அனுப்பலாம். தமிழில் அனுப்பும்போது நீங்கள்பயன்படுத்தும் font பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: [email protected])

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+