விஜயகாந்த் ஒரு ஞானக்குழந்தை: பண்ருட்டி

Subscribe to Oneindia Tamil

பழனி:

விஜயகாந்த்தைப் பார்த்து அரசியலில் இவர் குழந்தை என்று கேலி செய்தனர். ஆனால் விஜயகாந்த் ஒரு ஞானக் குழந்தை என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரிய கலையம்புத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,

விஜயகாந்த்தைப் பார்த்து பலரும் கேலி செய்கின்றனர். கட்சி ஆரம்பித்தபோது இவர்எப்படி கட்சி நடத்த முடியும், இவர் ஒரு அரசியல் கத்துக்குட்டி, குழந்தை என்றுவிமர்சித்தனர்.

ஆனால் விஜயகாந்த் ஒரு ஞானக்குழந்தை. எம்.ஜி.ஆர். போல தாயுள்ளத்துடன்செயல்படுகிறார்.

விஜயகாந்த்துக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து எல்லோரும் இப்போது மிரளுகிறார்கள்.சொத்தை விற்று விஜயகாந்த் கட்சி நடத்துகிறார். கருணாநிதியோ, ஜெயலலிதாவோஇப்படிச் செய்வார்களா?

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகள்.குழப்பத்தின் மொத்த உருவமாக அந்தக் கூட்டணி அமைந்துள்ளது. வைகோ மாற்றிமாற்றிப் பேசுகிறார். ராமதாஸ் 3வது அணி குறித்தும் பேசுவோம் என்கிறார்.

அரசியலில் உழைக்க வந்தவர் விஜயகாந்த், ஜெயலலிதா, கருணாநிதியைப் போலபிழைக்க வந்தவர் அல்ல. விஜயகாந்த் கட்சி தொடங்கிய அன்றைய தினமே ஜாதிக்கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்றார் பண்ருட்டியார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+