ஜெ பிறந்த நாள்: கேக் வெட்டி, ரத்தம் தந்து
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் 58வது பிறந்த நாளையொட்டி அவருக்கு குடியரசுத்துணைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், ஆளுனர்பர்னாலா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஷெகாவத் வாழ்த்து செய்தி அனுப்ப, பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலைஜெயலலிதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.பர்னாலா:
இதேபோல பர்னாலாவும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததோடு ஒருவாழ்த்துச் செய்தியும் அனுப்பியுள்ளார். அதில், தமிழக மக்களுக்கு நீண்ட காலம்சேவையாற்ற நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் எனவாழ்த்தியுள்ளார்.
பூஜை, தேர் இழுத்தல், அபிஷேகம்:
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அம்மன்கோவில்கள் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு அபிஷேகம்செய்தனர்.
பல இடங்களில் தேர் இழுத்தனர், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ஓ.பி வெட்டிய 58 கிலோ கேக்:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் 58கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது.
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.அதேபோல ஜெயலலிதா பிறந்த நாள் விழா மலரை அவர் வெளியிட முதல் பிரதியைஅமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார்.
இதில் அனைத்து அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும், எம்பிக்களும்எம்எல்ஏக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் சிறப்புக் கொண்டாட்டங்களுக்கும் இன்றுஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
போயஸ் தோட்டத்தில்..
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில்பூங்கொத்துக்களுடன் குவிந்தனர். அங்கு வந்தவர்களுக்கு எல்லாம் தொண்டர்கள்இனிப்பும் வழங்கினர். வெடி போட்டு மகிழ்ந்தனர்.
ஆனால், அவர்களை ஜெயலலிதா சந்திக்கவில்லை.
ஜெ. விருது:
இதற்கிடையே அமெரிக்காவில் இயங்குவதாகக் கூறப்படும் உலக தமிழ் இளைஞர்கள்கூட்டமைப்பின் சார்பில் 2006ம் ஆண்டுக்கான டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிறப்புவிருதுகள் வழங்கப்பட்டன.
இருதய நிபுணர் செரியன், சென்னை பல்கலை துணை வேந்தர் தியாகராஜன், ஐயர்இம்பெக்ஸ் நிறுவன இயக்குனர் ராதாகிருஷ்ண ஐயர் மற்றும் பண்யான் அமைப்புக்குஇந்த விருதுகள் வழங்கப்பட்டன.
ரத்த தானம்:
மதுரையில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அக் கட்சியில் புதிதாக ஐக்கியமானமுன்னணி நடிகர் முரளி ரத்த தானம் செய்தார். நர்சுகள் ஊசியைக் குத்தி மீண்டும்எடுத்து குத்தியதில், வெளியேறிய ரத்தத்தில் முரளியின் சட்டையெல்லாம் ரத்தமானது.
சென்னையில் சேகர் பாபு தலைமையில் அதிமுகவினர் ரத்த தானம் செய்தனர்.
இலவச தையல் எந்திரம்:
அதே போல அமைச்சர் வளர்மதி, எம்.பி. கோகுல இந்திரா ஆகியோர் சென்னையில்பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினர்.
பாண்டிச்சேரியில்..
அதே போல பாண்டிச்சேரியிலும் அதிமுகவினர் எம்எல்ஏ அன்பழகன் தலைமையில்ஜெயலலிதா பிறந்த நாளைக் கொண்டாடினர். கட்சி தலைமையகத்தில் கட்சிக்கொடியேற்றிய அன்பழகன் அனைவருக்கும் இன்ப்பு வழங்கினார்.
அங்குள்ள புகழ்பெற்ற மனக்குள விநாயகர் ஆலயத்திலும் ஜெயலலிதாவுக்காகசிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
தீச்சட்டி தூக்கும் வளர்மதி-தேர் இழுத்த முரளி












Click it and Unblock the Notifications