கருணா உள்ளிட்ட குழுக்களிடம் ஆயுதங்களை பறிக்க இலங்கை அரசு உறுதிமொழி

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா:

பேச்சுவார்த்தையின் இறுதியில் நார்வே-சுவிஸ் குழுவினருடன் புலிகள், அரசுக் குழுவினர்

கருணா குழுவினர், இபிடிபி, பிளாட், ஈபிஆர்எல்ப், ஜிகாத் குழு ஆகியவற்றிடம் இருந்து ஆயுதங்களை பறிக்கநடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது.

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக நடந்தபேச்சுவார்த்தையின் இறுதியில் இந்த உறுதிமொழி தரப்பட்டது.

முதல் சுற்றுப் பேச்சு முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 19 முதல் 21ம் தேதி வரை மீண்டும் இரு தரப்பினரும் சந்தித்துப்பேச்சு நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:

இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவது, தமிழர், முஸ்லீம்கள், சிங்களஇனத்தினரின் பிரச்சனைகள் குறித்து பேசினர்.

இதில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைபிடிப்பது என இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும்முடிவெடுத்துள்ளனர். மேலும் இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும்முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடத்தல்கள், கொலைகள், வன்முறையைத் தூண்டுவது ஆகிய செயல்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க இருதரப்பினரும் உறுதியளித்தனர்.

இலங்ககை ராணுவத்தினரும் போலீசாருக்கும் எதிராக எந்த வன்முறையும் நடக்காமல் தடுக்க நடவடிக்கைஎடுப்பதாக புலிகள் உறுதியளித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளை மதித்து நடந்து கொள்வதாக இலங்கை அரசும் உறுதியளித்தது. இதன்படி,பாதுகாப்புப் படையினரைத் தவிர மற்றவர்கள் ஆயுதம் ஏந்தித் திரிவதைத் தடுப்பதாக உறுதிமொழி அளித்துள்ளது.

(கருணா குழுவினர், இபிடிபி, பிளாட், ஈபிஆர்எல்ப், ஜிகாத் குழு ஆகியவற்றிடம் இருந்து ஆயுதங்களை பறிக்கஇந்தப் பேச்சுவார்த்தையின்போது புலிகள் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுக்களின்பின்னணியில் இலங்கை ராணுவம் இருந்து வருவதாக புலிகள் குற்றம் சாட்டினர். இந்தக் குழுவினரின்செயல்களால் தான் இலங்கையில் பதற்றமே அதிகரித்தது)

அதே போல வடகிழக்கில் குழந்தைகள் நலணைப் பேணவும், சிறார்கள் புலிகள் படையில் சேருவதைத் தடுக்கவும்நடவடிக்கை எடுப்பதாக புலிகள் உறுதியளித்தனர்.

மேலே குறிப்பிட்ட உறுதிமொழிகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை இலங்கை அமைதிக்கண்காணிப்புக் குழு பார்வையிடும். அடுத்த முறை புலிகளும் இலங்கை அரசும் பேச்சுவார்த்தையில் அமரும்போதுகண்காணிப்புக் குழு தனது அறிக்கையை வழங்கும்.

மேலும் ஏப்ரல் 19 முதல் 21ம் தேதி வரை மீண்டும் இரு தரப்பினரும் சந்தித்துப் பேச்சு நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையையும் சுவிட்சர்லாந்திலேயே நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசு உறுதிமொழிகள் அளிப்பது புதிதல்ல என்பதும், அதைப் பின்பற்றுவதில்லை அக்கறைகாட்டுவதில்லை என்பதுமே கடந்த கால வரலாறு. இந்த முறை மீண்டும் போர் வெடிக்காமல் தவிர்க்க தனதுஉறுதிமொழிகளை முழுமையாக அமல்படுத்த வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+