பாண்டி சட்டசபையில் சங்கு ஊதிய அதிமுக!
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் அரசைக் கண்டித்து சங்கு ஊதி, மேளம் அடித்துஅதிமுக உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
புதுவை சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ. 1,213 கோடி மதிப்பிலானபட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அரசின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டுப்பேசினார்.அப்போது குறுக்கிட்ட அன்பழகன் உள்ளிட்ட இரண்டு அதிமுக உறுப்பினர்களும்எழுந்து கையில் வைத்திருந்த சங்குகளை எடுத்து ஊதினர். கையில் இருந்த மேளத்தைஎடுத்து அடித்தபடி சங்கு ஊதியதால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த அரசு செத்து விட்டது, என்ன கோரிக்கை விடுத்தாலும் அது செவிடன் காதில்ஊதிய சங்காக மாறி விட்டது என்பதை குறிக்கும் வகையில் இவ்வாறுசெயல்படுவதாக தெரிவித்த அன்பழகன், மக்கள் நலக் கோரிக்கைளைநிறைவேற்றுமாறு பலமுறை காங்கிரஸ் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அரசு அதைகவனிக்கவே இல்லை என்று அன்பழகன் குறை கூறினார்.
இதையடுத்து சங்கு ஊதிய இருவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்குசபாநாயகர் டி.ராமச்சந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும்வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல, காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளைக் குறை கூறி பாமக உறுப்பினர்கிருஷ்ணமூர்த்தியும் வெளிநடப்புச் செய்தார்.












Click it and Unblock the Notifications