இன்று திமுக பட்டியல் கொடுக்கிறது காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியிடம், தொகுதி விவரப் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (சனிக்கிழமை) வழங்குகிறது.

திமக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அத்தனை கட்சிகளும் தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை ஏற்கனவே கொடுத்து விட்டன. கோஷ்டிகள் அதிகமாக இருப்பதால் பட்டியல் தயாரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் தொகுதி விவரப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. பட்டியல் முடிவாகி விட்டதைத் தொடர்ந்து அது இன்று கருணாநிதியிடம் கொடுக்கப்படுகிறது.

இன்று காலை சென்னைக்கு வரும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

தயாரிக்கப்பட்டுள்ள தொகுதிப் பட்டியல் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதன் பின்னர் அப்பட்டியலை வீரப்ப மொய்லி, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், கருணாநிதியைச் சந்தித்து பட்டியலை கொடுக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+