காளிமுத்துவை சந்தித்தார் கருணாநிதி
சென்னை:
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துவை, திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமியின் மகன் கஜராஜன் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற கருணாநிதி, கஜராஜனை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் மருத்துவமனையின் முதல் தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காளிமுத்துவின் அறைக்குச் சென்றார்.
காளிமுத்துவை சந்தித்து நலம் விசாரித்தார். சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த கருணாநிதி பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கருணாநிதியுடன், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் வந்திருந்தனர்.
இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பின் காரணமாகவும், அரசியல் நாகரீகம் காரணமாகவும் காளிமத்துவை கருணாநிதி சந்தித்தார்.
திமுகவுடன் நீண்ட கால நட்பு கொண்டிருந்தவர் காளிமுத்து. சில காலம் திமுகவிலும் இருந்தார். அந்த நட்பின் அடிப்படையில்தான் காளிமுத்துவை கருணாநிதி சந்தித்தார் என்று விளக்கினர்.
முதல் முறை காளிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை முதல்வர் ஜெயலலிதா ஓடோடிச் சென்று பார்த்தார். ஆனால் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications