யாருக்கு ஆதரவு?-லாட்டரி வியாபாரிகள் மிரட்டல்
சென்னை:
லாட்டரி டிக்கெட் மீதான தடையை நீக்குவதாக உறுதியளிக்கும் கட்சிக்கே தங்களது ஆதரவு என்று அகில இந்திய லாட்டரி வியாபாரிகள் மற்றும் சார்பு தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் உஸ்மான் பயஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்களில் பெரும்பாலானவர்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி விற்பனையாளர்கள் பல்வேறு விதங்களில் கோரி வருகின்றனர். ஆனால் லாட்டரிச் சீட்டுக்கான தடையை நீக்கும் எண்ணம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து விட்டார்.
இந் நிலையில் வரும் தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை லாட்டரிச் சீட்டு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய லாட்டரி வியாபாரிகள் சங்கத் தலைவர் உஸ்மான் பயஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் மொத்தம் 6 லட்சம் லாட்டரிச் சீட்டு வியாபாரிகள் உள்ளனர். மொத்தம் 25 லட்சம் குடும்பத்தினர் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தடையை நீக்கக் கோரி பல ரூபங்களில் போராடிப் பார்த்து விட்டோடம். ஒரு பயனும் இல்லை.
லாட்டரித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் சாதாரணமானவர்கள். கண் தெரியாதவர்கள், கால் ஊனற்றவர்கள், வாய் பேச முடியாதவர்கள், படிக்காதவர்கள், ஏழை, எளியவர்கள்தான் இந்தத் தொழிலில் அதிகம் உள்ளனர்.
எனவே இதை கருத்தில் கொண்டு, இவர்களின் பரிதாப நிலையை மனதில் கொண்டு உடனடியாக தடையை நீக்கி உத்தரவிட வேண்டும். எங்களது நிலையை பரிசீலனை செய்து, லாட்டரிச் சீட்டு தடையை நீக்க எந்தக் கட்சி உறுதி அளிக்கிறதோ அந்தக் கட்சியை வரும் சட்டசபைத் தேர்தலில் ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
எங்களிடம் மொத்தம் 25 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. எனவே இதை எடுத்துக் கூறி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். யார் எங்களை ஆதரிக்கிறார்களோ, அவர்களுக்கு எங்களது அனைத்து வாக்குகளையும் அப்படியே செலுத்துவோம் என உறுதியளிக்கிறோம் என்றார் பயஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications