இன்னொரு செமி கண்டக்டர் ஆலை: விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?
சென்னை:
செமி கண்டக்டர்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான செம் இண்டியா சென்னையில் தனது நிறுவனத்தைத்தொடங்க முன் வந்தும் கூட, தமிழக அரசு அந்த நிறுவனத்தினரை அலட்சியமாக நடத்தியதால் அந்தத்தொற்சாலையை நாம் இழந்துவிட்டோம் என மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்கூறினார்.
சென்னையில் எரிக்சன் நிறுவன சாப்ட்வேர் கிளையைத் துவக்கி வைத்த பின் நிருபர்களிடம் பேசிய மாறன்,அமெரிக்காவின் முன்னணி செமி-கண்டக்டர் நிறுவனமான ஐஇஎம்சி தென் இந்தியாவில் தனதுதொழிற்சாலையை அமைக்க ஆர்வம் காட்டியுள்ளது.
3 பில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கப்படவுள்ள அந்த தொழிசாலை ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம்ஆகியவற்றில் ஒரு மாநிலத்தைத் தேர்வு செய்ய உள்ளது. மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புக்களைஉருவாக்கவுள்ளது அந்தத் தொழிற்சாலை.
இந்தத் தொழிற்சாலையை தமிழகத்துக்குத் கொண்டு செல்ல முயற்சிகள் எடுக்குமாறு தமிழக அரசுக்கு கடிதம்எழுதினேன். ஆனால், அவர்களுக்கு இந்த நல்ல வாய்ப்பைப் பற்றி கவலை இருப்பதாகத் தெரியவில்லை.அவர்கள் தேர்தல் மூடில் இருக்கிறார்கள் போலிருக்கிறது.
ஏற்கனவே இவர்களது அலட்சியத்தால் தான் செம் இந்தியா, ஆந்திராவுக்குப் போனது. அந் நிறுவனத்தைதமிழக்துக்கு இழுக்குமாறு மாநில அரசுக்கு 2 முறை கடிதம் போட்டும் வீணாகிவிட்டது. அந்த நிறுவனத்தினரைமுறையாகக் கூட தமிழக அரசு நடத்தவில்லை.
தமிழக அதிகாரிகளை சந்திக்க வந்த அவர்களை அலட்சியப்படுத்தி, சரியாகக் கூட நடத்தாமல் அனுப்பிவைத்தார்கள்.
இதையடுத்து ஆந்திரா அந்த நிறுவனத்தை வாரிக் கொண்டுவிட்டது. கர்நாடகமும் நல்ல போட்டியைத் தந்தது.ஆனாலும் ஆந்திராவில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக அங்கு போய்விட்டது செம் இந்தியா.
செம் இந்தியாவும் 3 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளது. அந்த நல்ல வாய்ப்பை தமிழகம்இழந்துவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications