மகாபலிபுரத்தில் கருணாநிதி-வைரமுத்து ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக மகாபலிபுரத்தில் இன்று கவிஞர் வை ரமுத்துவுடன்கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் சீட் கேட்டும், தன்னைச் சந்திக்கவும் தலைவர்களும் கட்சியினரும் அறிவாலயத்தையும்கோபாலபுரம் இல்லத்தை முற்றுகையிட்டு வருவதால், இன்று காலை திடீரென மகாபலிபுரம் கிளம்பிச் சென்றார்கருணாநிதி.

அங்கு ஒரு ஹோட்டலில் அவருக்காக ரூம் புக் செய்யப்பட்டிருந்தது. துரைமுருகன் உள்ளிட்ட மிகச் சிலருடன்மட்டும் அங்கு சென்ற கருணாநிதியை கவிஞர் வைரமுத்து வந்து சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம்ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

வைகோவை திமுகவுக்கு கூட்டணிக்கு மீண்டும் கொண்டு வந்தவர்களில் வைரமுத்து மிக முக்கியமானவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலைத் தந்துவிட்ட நிலையில், தனதுகட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த கருணாநிதி இன்று வைரமுத்துவுடன் ஆலோசனைநடத்தியது மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள், தொகுதிகள் குறித்து வைரமுத்துவிடம் கருணாநிதி பேசியதாகத்தெரிகிறது. இதையடுத்து வைகோவை வைரமுத்து சந்திக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

திருச்சியில் வரும் 3,4,5 ஆகிய தேதிகளில் திமுக மாநில மாநாடு நடக்கிறது. அதில் கட்சிகள் போட்டியிடும்தொகுதிகளின் எண்ணிக்கையை கருணாநிதி அறிவிக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+