தம்- பெட்ரோல்: உயிரைக் குடித்த சிகரெட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிகரெட் பிடித்தபடி மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் ஊற்றியவர் தீப் பிடித்து பலியானார்.

கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (46).

இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் வாங்கி வந்தார். தம் அடித்தபடியே மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை ஊற்றினார்.

அப்போது, பெட்ரோல் தரையில் சிந்தியது. இந் நிலையில் அவரது கையில் இருந்த சிகரெட்ட்டும் தவறி விழுந்து, தரையில் கிடந்த பெட்ரோலில்விழுந்தது.

இதையடுத்து தீப் பிடித்துக் கொண்டது. பரவிய தீயால் மோட்டார் சைக்கிளும் தீப் பிடித்துக் கொள்ள ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாம்தடுமாறினார் குமார். அப்போது வேகமாகப் பரவிய தீ அவர் மீதும் பரவியது.

சட்டை, பேண்ட்டில் தீ வேகமாக் பரவி உடலும் பற்றிக் கொண்டது.

இதையடுத்து கீழே விழுந்து துடித்தார் குமார். அக்கம்பக்கத்தின் ஓடி வந்து தீயை அணைத்தபோது உடல் முழுவதும் கருகிப் போயிருந்தார்.

இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+