தூணில் கட்டி வைத்து பெண் மானபங்கம்!!

Subscribe to Oneindia Tamil

வாடிப்பட்டி:

மதுரை அருகே பெண்ணை அடித்து, ஊர் மந்தையில் தூணில் கட்டி வைத்து மானபங்கம் செய்த மூன்று பேரைபோலீசார் கைது செய்தனர்.

வாடிப்பட்டி செம்புக்குடிபட்டியை சேர்ந்தவர் சாலமன் (35). இவரது மனைவி ப்ரியா (28). கணவன், மனைவிக்குஇடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இவர்களது பிரச்னையை பேசித் தீர்க்க ப்ரியாவின் தந்தை முனியாண்டி, தாயார் காளியம்மாள், சகோதரிகாளியம்மாள் (35), சகோரர் வேலுசாமி ஆகியோர் செம்புக்குடிபட்டிக்கு வந்தனர்.

சாலமன் தரப்பினருடன் அவர்கள் பேச்சு நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு சாலமன், அவரது சகோதரர் அகஸ்டின், நண்பர்கள் ஜெயின் கிருஷ்ணன், ரவி மற்றும் சிலர்அரிவாள், கடப்பாறை, உருட்டுக்கட்டை ாகியவற்றால் முனியாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கினர்.

பின்னர் ப்ரியாவின் சகோதரி காளியம்மாளை அடித்து உதைத்து ரோட்டில் இழுத்துச் சென்ற அக் கும்பல், ஊர்மந்தையில் உள்ள தூணில் கட்டி வைத்து மானபங்கம் செய்தனர்.

தடுக்க வந்தவர்களிடம் அரிவாள், கத்தியை காட்டி மிரட்டினர்.

காயமடைந்தவர்கள் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த கொடூரத்தைச் செய்தவர்களைகைது செய்யக்கோரி செம்புக்குடிப்பட்டி மக்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து போலீசார் சாலமன், அகஸ்டின், ஜெயின் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலர்தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+