தமிழக போலீசார் கடமை வீரர்கள்-ஜெ புகழ்ச்சி
சென்னை:
![]() |
தமிழக காவல்துறையினர் கடமை வீரர்கள் ஆவர் என்று முதல்வர் ஜெயலலிதா பாராட்டித் தள்ளினார்.
காவல்துறையினர், தீயணைப்புப் படையினர், சிறைத்துறையினர், ஊர்க் காவல் படையினருக்கு குடியரசுத்தலைவரின் பதக்கம் மற்றும் முதல்வரின் பதங்களை வழங்கும் விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்நடந்தது. அதில் 235 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதிரடிப்படையின் கூடுதல் டிஜிபி விஜய்குமார், எஸ்பி செந்தாமரைக் கண்ணன், சென்னை காவல்துறையின் மிகச்சிறந்த அதிகாரியான சைலேந்திர பாபு, வெள்ள நிவாரணப் பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட கோட்டூர்புரம்இன்ஸ்பெக்டர் ராஜேந்கிரன் உள்ளிட்ட 54 பேருக்கு முதல்வர் ஜெயலலிதாவே தன் கையால் விருதுகளை வழங்கிகெளரவித்தார்.
மற்றவர்களுக்கு டிஜிபிக்கள் வழங்கினர். விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் சாதித்த சாதனைகள் அனேகம். இன்று வளர்ச்சிப் பணிகளில் மற்ற மாநிலங்களுக்குவழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது. அத்தகைய வளர்ச்சிக்கு அடிப்படையானது அமைதியைக் காக்கும் பணி.
தமிழகத்தில் அமைதி காக்கப்பட வேண்டும் என்தே என் லட்சியம். தமிழக மக்கள் அச்சமின்றி நிம்மதியாகவாழ்ந்திட வேண்டும் என்பதே என் குறிக்கோள்.
எனது இந்த லட்சியத்தை ஈடேற்றி, தமிழக மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் அமைதியாக வாழ்வதற்கு சட்டம்ஒழுங்கைக் காக்கும் தமிழக காவல்துறையினரின் கண்ணயராத கடமை ஆற்றலே காரணம்.
சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இது ஏதோ திடீரெனநடந்துவிட்டதல்ல. இந்த சாதனையைப் படைக்க எனது அரசு மேற்கொண்ட பல நடவடிக்கைகளே இதற்குக்காரணம்.
எனது அரசின் செயல்களால் தான், தமிழகத்தில் குற்றங்கள் கணிசமாகக் குறைந்தன. குற்ற வழக்குகளில்கண்டுபிடிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளது.
அடிதடி, காய வழக்குகள் 5 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிட்டன. கலவர வழக்குகள் பாதிக்கும் கீழாககுறைந்துள்ளன. சொத்து சம்பந்தமான குற்றங்கள், வன்முறைக் குற்றங்களும் பாதிக்கும் கீழாகிவிட்டன.பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கணிசமாகக் குறைந்துவிட்டன.அதே போல குற்றக் கண்டுபிடிப்பு 86 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வீரப்பன் கொல்லப்பட்டது உள்பட பல சாதனைகளை இந்த அரசு செய்தது. எனது அரசில் இப்படிப்பட்டவரலாறுகளை படைத்தது காவல்துறை தான். ஆனால், காவல்துறைய விமர்சிப்பதையே சிலர் கடமையாகவைத்துக் கொண்டுள்ளனர்.
ஒரு காவல்துறை உயர் அதிகாரி (உளவுத்துறையின் சிவனாண்டி) ஒரு கட்சியின் (அதிமுக) பொதுச் செயலாளர்போல செயல்படுவதாக ஒருவர் (டாக்டர் ராமதாஸ்) கூறுகிறார்.
இவ்வாறு பழித்துரைக்கும் வார்த்தைகள் காவலர்கள் மனதை காயப்படுத்துகின்றன. காயம்பட்ட நேரத்திலும்கடமையை முழுமையாகச் செய்பவர்கள் தமிழக காவல்துறையினர். தமிழக காவல்துறையினர் கடமை வீரர்கள்.
நம்மை வெல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை என்ற அள்ளக் குறையாத நம்பிக்கையோடு அடி எடுத்துவைப்போம் என்றார் ஜெயலலிதா.













Click it and Unblock the Notifications