விஜய்காந்த் மீது டி.ஆர்.பாலு தாக்கு
சென்னை:
கோயம்பேட்டில் பாலம் கட்டுவது தொடர்பாக விஜய்காந்தோ என் மீது தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டுகிறார். என்னை அவமானப்படுத்துவது போல பேசுகிறார். அவரது கட்டடத்தை இடிக்காமல் பாலம் கட்டஅவர் மாற்று வரைபடம் தரட்டும். நான் காத்திருக்கிறேன் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்டி.ஆர்.பாலு கூறினார்.
நிருபர்களிடம் பாலு கூறியதாவது:கோயம்பேடு சந்திப்பில் அடுக்கு மேம்பாலம் கட்ட தனியார் நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. மாநிலஅரசும் சில பகுதிகளை காலி செய்து தர வேண்டியுள்ளது.
இந்தப் பாலத்தால் 150 பேரின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய பாலம் கட்டும்போது இவ்வாறுசிலருக்கு பாதிப்பு ஏற்படத் தான் செய்யும். ஆனால், அவர்களுக்கு உரிய நிவாரணம் தரப்படும்.
நடிகர் விஜய்காந்த் அவரது மண்டபத்தை நாங்கள் வேண்டுமென்றே இடிப்பதாக திமுக மீதும் என் மீதும் பழிசுமத்தி வருகிறார். அவர் கட்சி தொடங்கும் முன்பே பாலத்தின் பணிகள் ஆரம்பித்துவிட்டன.
ஆனால், திமுக மீது பழியைப் போட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார். இது நியாயமில்லை. விஜய்காந்த்என் நண்பர் தான், ஆனால் அதற்காக திட்டங்களை கைவிட முடியாது.
இந்தியா முழுக்க சாலைகள் அகலப்படுத்தும்போது எத்தனையோ மக்களின் வீடுகள், கட்டடங்கள், கோவில்கள்,மசூதிகள், தேவாலயங்க் கூட இடிக்கப்படுகின்றன. நல்ல திட்டங்களுக்கு மக்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.
ஆனால், விஜய்காந்தோ என் மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுகிறார். என்னை அவமானப்படுத்துவதுபோல பேசுகிறார். அவரது கட்டடத்தை இடிக்காமல் பாலம் கட்ட அவர் மாற்று வரைபடம் தரட்டும். நான்காத்திருக்கிறேன்.
மற்ற நிலங்களை ஆர்ஜிதப்படுத்தும் வரை அவருக்கு நியாயமான கால அவகாசம் தரப்படும். மற்றபடிதிட்டமிட்டபடி 2 வருடத்தில் பாலம் கட்டி முடிக்கப்படுவது மட்டும் உறுதி என்றார்.












Click it and Unblock the Notifications