பெண் மாயம்-புகாரை அலட்சியப்படுத்திய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

தேனி:

தேனி மாவட்டம் பொம்மைய கவுண்டன்பட்டியில் காணாமல் போன மகளைக்கண்டுபிடித்துத் தரக் கோரி கொடுத்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல்அலட்சியம் காட்டியதால், அந்தப் பெண்ணின் தந்தை ஊர் மக்களைத் திரட்டி வந்துகாவல் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் அல்லிநகரத்தை அடுத்துள்ளது பொம்மைய கவுண்டன்பட்டி.இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டையன். இவரது மகள் பரமேஸ்வரி (வயது 19).

பரமேஸ்வரி அப்பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த23ம் தேதி முதல் அவரைக் காணவில்லை. தனது மகளை கண்ணன் என்பவர்தான்கடத்திச் சென்று விட்டதாக கூறி அல்லிநகரம் காவல் நிலையத்தில் பட்டையன் புகார்கொடுத்தார்.

அந்தப் புகாரில், தனது மகளை கண்ணன் கடத்திச் செல்வதற்கு மாநில பாமகஇளைஞர் அணியைச் சேர்ந்த வைகை கண்ணன், அலெக்ஸ் பாண்டியன், அழகர்சாமி,சூர்யா ஆகியோர் உடந்தை என்றும் கூறியிருந்தார்.

இந்தப் புகாரை போலீஸார் பதிவு கூட செய்யாமல் வைத்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பட்டையன், தனது ஊருக்குச் சென்று மக்களைத் திரட்டிவந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார். சாலைமறியலிலும் அவர் இறங்கினார்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் சுறுசுறுப்படைந்த போலீஸார் பட்டையனைசமாதானப்படுத்தி போராட்டத்தை விலக்கிக் கொள்ளச் செய்தனர். பின்னர் பட்டையன்புகாரின் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஒரு பெண் காணாமல் போன புகாரைக் கொடுத்தால் அதை போலீசார் பதிவுசெய்வதற்காக போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் தமிழக காவல்துறை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+