யானைகளுக்காக வாழும் ஜெ.- இளங்கோவன்
சேலம்:
கட்சிக்குள் வந்து ஓராண்டுக்குள்ளேயே மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தமிழகஇளைஞரணி தலைவர் பதவி கேட்பது சரியல்ல என்று மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
ஜவுளித்துறை இணையமைச்சரான இளங்கோவன் நிருபர்களிடம் பேசுகையில்,தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லி, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்தியஅமைச்சர் வாசன் ஆகியோருடன் நானும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தேர்தல் தொகுதி பங்கீடுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
திண்டிவனம் ராமமூர்த்தி வயதில் மூத்தவர். இவர் கட்சியை விட்டு சென்றதால் காங்கிரசுக்கு எந்தவிதமானபாதிப்பும் இல்லை. அவர் விலகியதால் கட்சியில் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பும், இடமும் கிடைக்க வழிஏற்பட்டுள்ளது.
மேலும் சில தலைவர்களும் கட்சியில் இருந்து விலகி செல்ல காத்துள்ளனர். அவர்களும் போய்விட்டால்காங்கிரசில் உள்ள இளைஞர்கள் பதவி, பொறுப்புக்கு வர வாய்ப்பு கிடைக்கும்.
கட்சிக்கு வந்து ஓராண்டுக்குள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தமிழகஇளைஞரணி தலைவர் பதவி கேட்பதும், அதற்காக பிரச்சனை செய்வதும் சரியல்ல.
எனது மகன் அரசியலுக்கு வர நான் காரணமாக இருக்க கூடாது. எனது மகன் தனது சுய முயற்சியில்அரசியலுக்கு வந்தால் வரவேற்கலாமே தவிர, என்னை வைத்து அரசியலில் பொறுப்புக்கோ, பதவிக்கோ வரஆசைப்படக்கூடாது. எனது மகனுக்காக நான் சீட் கேட்கவும் மாட்டேன். பதவியைப் பெற்றுத் தர பிரச்னைசெய்யவும் மாட்டேன்.
நடிகர் விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பர். அவர் தவறான பாதைக்கு வந்துவிட்டார். இதனால் சினிமா ஒரு நல்லநடிகரை இழந்துவிட்டது. தனக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து அதெல்லாம் ஓட்டாக மாறும் என அவர் நம்பினால்நிச்சயம் ஏமாந்து போவார்.
மத்திய அரசின் பல திட்டங்களுக்கு தடையாக இருப்பவர் முதல்வர் ஜெயலலிதா. பிரச்சாரத்துக்கு அவர்எப்போது வருவார் என்று மக்கள் காத்துக் கொண்டுள்ளனர், தங்களது எதிர்ப்ப்ை காட்டுவதற்காக.
நடிகர் ரஜினிகாந்தின் "வாய்ஸ் கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் "சிவாஜி படத்தின் மூலம் தான்ரஜினியின் "வாய்ஸ் கேட்க வாய்ப்பு கிடைக்கும் போலிருக்கிறது என்று ரஜினியை கிண்டலடித்தார்இளங்கோவன்.
கடந்த சில தேர்தல்களாக, தேர்தலுக்கு ஒரு கட்சி என்ற வகையில் மாற்றி மாற்றி வாய்ஸ் தந்தார் ரஜினி. அதில்பெரும்பாலும் அவர் வாய்ஸ் கொடுத்த கட்சிக்கு தோல்வியே கிடைத்தது என்பது நினைவுகூறத்தக்கது.
பிரியாணி போடுவது ஏன்?:
முன்னதாக சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய இளங்கோவன்,
ஜெயலலிதா பிறந்தநாளின் போது பிரியாணி போடுகிறார்கள், சைக்கிள், ஆட்டோ ரிக்ஷா கொடுக் கிறார்கள். எல்லாம்எதற்காக?. (ஆட்சி) போகும் காலத்தில் புண்ணியம் தேடிக் கொள்வதற்காக தான்.
தமிழகத்தில் வரலாறு கானாத மழை பெய்தபோது மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்குஒழுங்காகத் தராமல், பாதிப்பு இல்லாத இடங்களுக்கும், ஓட்டு போடுங்கள் என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டும் ரூ.2,000கோடியை வாரி இறைத்திருக்கிறார்கள்.
நான் நல்லவள், தூயவள் என்று தேர்தலின் போது ஓட்டு கேட்க வருவார் ஜெயலலிதா. அதை கண்டு நீங்கள் ஏமாறவேண்டாம்.யானைகளுக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கும் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications