2 தொகுதிகளில் போட்டியிட ஜெ. முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா வரும் சட்டசபைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில்போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் எனத்தெரிகிறது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகஇறங்கியுள்ளன.

மக்கியக் கட்சிகளின் தலைவர்கள் எந்தத் தொகுதிகளில் போட்டியிடுவார்கள் எனதமிழக மக்கள் ஆவலோடு காத்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியைப்பொறுத்தவரை அவர் இந்த முறை தொகுதி மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கம் தொகுதிக்குப் பதில் திருவல்லிக்கேணி தொகுதியில் அவர்போட்டியிடலாம் எனத் தெரிகிறது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் தொகுதிமாறுகிறார்.

துறைமுகம் தொகுதிக்குப் பதில் ஆரம்ப காலத்தில் போட்டியிட்டு வென்றபுரசைவாக்கம் தொகுதிக்கு மாற அவர் விருப்பப்படுகிறார்.

ஆற்காடு வீராசாமி அண்ணா நகர் தொகுதியிலேயே போட்டியிடலாம் எனத்தெரிகிறது. துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில்மீண்டும் போட்டியிடுவது உறுதி.

துரைமுருகன் காட்பாடியிலும், பொன்முடி விழுப்புரத்திலும், பரிதி இளம்வழுதிஎழும்பூரிலும் போட்டியிடுவதில் மாற்றம் இருக்காது.

அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதாதான் முக்கியத் தலைவர், ஒரே தலைவர்.எனவே ஜெயலலிதா எங்கு போட்டியிடுவார் என்பதில் அதிமுகவினரிடையே பெரும்ஆர்வம் எழுந்துள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதியிலேயே அவர் மீண்டும் போட்டியிடுவது உறுதி. அந்தஅளவுக்கு தொகுதியை பாலூட்டி, சீராட்டி கவனித்து வந்துள்ளார் ஜெயலலிதா.

எனவே ஆண்டிப்பட்டியில்தான் அம்மா மீண்டும் நிற்பார்.

அத்தோடு கூடுதலாக இன்னொரு தொகுதியிலும் போட்டியிட ஜெயலலிதா முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

அது மருங்காபுரி தொகுதியாக இருக்கலாம் என்று அதிமுகவில் பேச்சு அடிபடுகிறது.மருங்காபுரி அதிமுகவின் கோட்டைகளில் ஒன்று.

மருங்காபுரியில் இப்போதைய எம்.எல்.ஏவாக அதிமுகவைச் சேர்ந்த செல்லையாஉள்ளார். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை 25,272 வாக்குகள் வித்தியாசத்தில்தோற்கடித்தார்.

இங்கு மதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.துரைராஜ், 11,796 வாக்குகள்பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிட்டதுநினைவிருக்கலாம்.

இம்முறை திமுக கூட்டணியில் மதிமுக இருந்தாலும் கூட, மருங்காபுரி தொகுதிஅதிமுகவின் கோட்டை என்பதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும் எனகருதப்படுகிறது.

மருங்காபுரி தொகுதியில் நிற்காவிட்டால் ஈரோடு மாவட்டத்தில் ஏதேனும் ஒருதொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. நிச்சயமாக தன்னைக்கவிழ்த்துவிட்ட பர்கூர் தொகுதிக்கு அவர் போக வாய்ப்பில்லை.

ஜெயலலிதா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து முக்கியமாகபேசப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா இரண்டு தொகுதிகளில் நின்று இரண்டிலும் வெற்றிபெற்றால்தான் அடுத்து அவர் ஆட்சி அமையும் என்று அம்மாவுக்கு நெருக்கமானஜோசியர்கள் அடித்துக் கூறியுள்ளார்களாம்.

எனவேதான் இரண்டு தொகுதிகளில் நிற்கும் முடிவுக்கு அம்மா வந்துள்ளதாககூறுகிறார்கள்.

கடந்த 1991ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா பர்கூர், காங்கேயம் ஆகிய இருதொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.

1996ல் நடந்த தேர்தலில் இதே தொகுதிகளில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.கடைசியில் பர்கூரில் மட்டும் போட்டியிட்டார். அதில் தோல்வியுற்றார்.

2001ம் ஆண்டு தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.எல்.ஏவாகஇல்லாத நிலையில், முன்னாள் ஆளுனர் பாத்திமா பீவியை மடக்கி, முதல்வரானார்ஜெயலலிதா.

பின்னர் தனி நீதிமன்றம், டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்குப் பாதகமாகதீர்ப்பளித்ததால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பெரியகுளத்தில்சாயா கடை நடத்தி, எம்எல்ஏ ஆகி, அமைச்சரும் ஆகிவிட்ட ஓ.பன்னீர் செல்வம்திடீரென முதல்வரும் ஆனார்.

அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து டான்சி வழக்கிலிருந்து கடும்கண்டனத்துடன் விடுதலை ஆனார் ஜெயலலிதா. இதன் பின்னர் நடந்த இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 3-வது முறையாகமுதல்வர் பதவியை ஏற்றார் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+