ஜிப்மரில் நோயாளிகள் மீது போலீஸ் தாக்குதல்
பாண்டிச்சேரி:
புதுவையில், பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்களுக்கும், சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் பொது மக்கள் மீது பயங்கர தடியடி நடத்தினர்.புதுவையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவமனை ஜிப்மர். மிகவும் பிரபலமான இந்த மருத்துவமனையை தனியார்மயமாக்க மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு ஜிப்மர் ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
ஜிப்மரை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை திடீரென ஜிப்மர் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து மருத்துவமனை வளாகத்தில் கூடி போராட்டம் நடத்தினார்.
இதனால் சிகிச்சைக்காக வந்த நூற்றுக்கணக்கான நோயாளிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இப்படி ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தும் செய்வது என்ன நியாயம் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம், பொதுமக்கள சிலர் கேட்டதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அடிதடி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
பதற்றம் மிகவும் அதிகரித்த நிலையில் தகவல் போலீசாருக்குப் போனது.
வேகமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த போலீசார், போராட்டம் நடத்திய ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பொது மக்களை தடியடி நடத்திக் கலைத்தனர். மேலும், ஊழியர்களுக்கு பாதுகாப்பாக ஏராளமான போலீஸாரும் நிறுத்தப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் உள் நோயாளிகள் பிரிவை முற்றுகையிட்டு அங்கு போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அங்கும் விடாத போலீஸார் பொது மக்களை மருத்துவமனை வளாகத்திலிருந்து விரட்டி அடித்தனர்.
பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஊழியர்கள் இப்படி அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து தங்களது கடமையை மறந்து காற்றில் பறக்க விடுவது புதுவை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஆதரவாக போலீஸ் வேறு...












Click it and Unblock the Notifications