விவஸ்தை கெட்ட விஜய்காந்த்: மன்சூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விஜய்காந்த் கட்சியில் கால் அமுக்கிவிட்டவன் தான் பொதுச் செயலாளர், மேல் வேலை பார்த்தவன் தான்பொருளாளர் என்று நடிகர் மன்சூர் அலி கான் கூறினார்.

நிருபர்களிடம் மன்சூர் கூறியதாவது:

எனக்கு எப்போதும் பிடித்த நடிகர் எம்ஜிஆர். அப்புறம் விஜய்காந்த். எனக்கு சினிமாவில் வாய்ப்பளித்தவர்அவர். அந்த நன்றியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்.

ஆனால், விஜய்காந்தின் அரசியல் கொள்கைகளை எதிர்க்கிறேன். ஒரு கட்சிக்கு தலைவனாக இருக்கும் ஒருதகுதியும் விஜய்காந்துக்குக் கிடையாது. அவருக்காக உழைத்த என்னை, லியாகத் அலி கானை, ஒரு முஸ்லீமாகஇருந்தும் திருப்பதிக்குப் போய் விஜய்காந்துக்காக மொட்டை போட்டே இப்ராகிம் ராவுத்தரை தூக்கிஎறிந்துவிட்டார்.

எங்களுக்கு விஜய்காந்த்தே எல்லாம் என்று நம்பிக் கிடந்தவர்கள் நாங்கள்.

கால் அமுக்கிவிட்டவன் தான் அவரது கட்சியில் பொதுச் செயலாளர், மேல் வேலை பார்த்தவன் தான்பொருளாளர், மொத்தத்தில் அடிவருடிகளுக்கு மட்டுமே பொறுப்பு கொடுத்திருக்கிறார்.

பொண்டாட்டி பேச்சை எது எதற்கு கேட்க வேண்டும் என்று ஒரு விவஸ்தை இருக்கிறது. கட்சி நடத்தபொண்டாட்டி பேச்சை கேட்கும் ஒரே அரசியல் தலைவர் இவர் தான்.

எத்தனையோ நடிகர்கள் அதிமுகவிடம் போகிறார்கள். நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தும் கூட யாராவதுவிஜய்காந்திடம் போகிறார்களா?. ஏன்?

அவர்களுக்குத் தெரியும் விஜய்காந்தால் வெங்காயத்தைக் கூட உரிக்க முடியாது என்று. இப்போதைக்குவிஜய்காந்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் எண்ணம் இல்லை. ஆனா, நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது.

நான் மைக் புடிச்சா மாநாடு தான்.. நடந்தா பேரணி தான் என்றார் மன்சூர் பாய்.

சிறு வயது முதல் ஒன்றாக இருந்த இப்ராகிம் ராவுத்தரை விஜய்காந்திடம் இருந்து தூரமாக்கியது விஜய்காந்தின்மைத்துனர் சுதீஷ் தான் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+