செளதியில் 5 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
செளதி அரேபியாவில் பெட்ரேலிய ஆலை மீது தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் 5 தீவிரவாதிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த எண்ணெய் ஆலை நடந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் ரியாத் புறநகர்ப் பகுதியான அல்-ஹமாராவில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைபோலீசாரும் ராணுவத்தினரும் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் இன்று அதிகாலை 5தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.












Click it and Unblock the Notifications