விஜய்காந்த் அலுவலகம் சூறை-அடித்து உடைப்பு
கொடைக்கானல்:
![]() |
கொடைக்கானலில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேர்தல் பணி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் 3 தொண்டர்கள் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், உட்வில் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விஜயகாந்த் கட்சி தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகளில் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர்.
சீரமைப்பு வேலைகள் முடிந்த பின்னர் தொண்டர்கள் அலுவலகத்திலேயே அயர்ந்து தூங்கினர். அதிகாலை 3 மணியளவில், ஒரு கும்பல் அங்கு வந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கியது. தொண்டர்களையும் உருட்டுக் கட்டைகளால் பயங்கரமாக தாக்கினர்.
அலுவலத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். பின்னர் அலுவலகத்தில் இருந்த ரூ. 71,000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.
இந்தத் தாக்குதலில் அலுவலகம் முற்றிலும் சேதமடைந்தது. 3 தொண்டர்கள் காயமடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து வணிக வளாகத்தின் உரிமையாளர் சந்திரன் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் கார்த்திகேயன் என்பவர் உள்ளிட்ட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கட்சி அலுவலகத்திலிருந்து திருடப்பட்ட பணத்துடன் தலைமறைவாக உள்ள 3 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது. அலுவலகம் இயங்கும் இடம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் இந்த சூறையாடல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications