ஒரு சீட்டுக்காக உதயமான மக்கள் கட்சி
சென்னை:
அதிமுகவின் உதவியுடன் முன்னாள் பாமக பிரமுகர் பேராசிரியர் தீரனின் மக்கள் கட்சி சென்னையில் உதயமானது.
பாமகவில் முக்கியப் பொறுப்பில் பல காலம் இருந்த பேராசிரியர் தீரன் பின்னர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தமிழ் பாமக என்ற பெயரில் தனிக்கட்சியை நடத்தி வந்தார். பின்னர் அந்தக் கட்சியும் செயலிழந்தது.கடந்த மக்களவைத் தேர்தலின்போது டாக்டர் ராமதாசுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்தால் கொம்பு சீவி விடப்பட்ட வன்னிய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களில் தீரனும் ஒருவர்.
ஆனால், ரஜினியோடு சேர்ந்து எல்லோரையும் புரட்டிப் போட்டார் ராமதாஸ். இதையடுத்து அரசியலுக்கு கும்பிடு போட்டுவிட்டு சினிமா பக்கமாகவே திரும்பப் போனார் ரஜினி.
ரஜினியை நம்பி அரசியல் களத்தில் முளைத்த வன்னிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் அப்படியே நட்டாற்றில் விடப்பட்டன. தீரன் உள்ளிட்ட இந்தத் தலைவர்கள் அட்ரசே இல்லாமல் இருந்தனர்.
இந் நலையில், தற்போது சட்டசபைத் தேர்தல் வருவதால் மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளார் தீரன். கட்சி ஆரம்பிக்குமாறு அதிமுக தரப்பில் இருந்து கூறப்பட்டதால மக்கள் கட்சி என்ற பெயரில் புதுக் கட்சி கண்டுள்ளார் தீரன்.
இக்கட்சியின் அறிமுக விழா(??) சென்னையில் நடந்தது.
கட்சியின் தலைவராக பேராசிரியர் தீரன், பொதுச் செயலாளர்களாக விஜயலட்சுமி, விஸ்வநாதன், துணைப் பொதுச் செயலாளராக வந்தவாசி ஆதம்பாஷா,
துணைத் தலைவராக பல்லவ மோகன், கொள்கை பரப்புச் செயலாளராக ந.வா. கணேசன், சுற்றுச்சூழல் அணித் தலைவராக வில்வநாத ரெட்டி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
பின்னர் கட்சிக் கொடியை தீரன் அறிமுகப்படுத்தினார். கட்சியின் முதல் தீர்மானமாக முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி (அட்ரா சக்கை) ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தக் கட்சிக்கு மொத்தமே ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அனேகமாக ஆண்டிமடம் தொகுதி ஒதுக்கப்படலாம், அதில் தீரன் போட்டியிடக் கூடும்.
சமீபத்தில் ரஜினியைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் பெறச் சென்றார் தீரன். அவரை சந்தித்த ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா, தலைவர்கிட்ட சொல்றேன் என்று சொல்லி டீ கொடுத்து அனுப்பி வைத்துவிட்டார்.
இதுவரை தீரனை ரஜினி சந்திக்கவே இல்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications