திமுக சீட் பங்கீடு-2வது சுற்று பேச்சு தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அடுத்த கட்டபேச்சுவார்த்தைகளை திமுக தொடங்கியுள்ளது.

சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடமிருந்துஎத்தனை தொகுதிகள் தேவை என்ற பட்டியலை திமுக வாங்கியுள்ளது.

பாமக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியயூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின்பட்டியலை கொடுத்து விட்டன.

இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுக்களை திமுக தலைவர் கருணாநிதிதொடங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நேற்று மாலைஅவர் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், மத்திய குழுஉறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளைத் தர வேண்டும் என்றும்,அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள்தரப்பட்டுள்ளதையும் கருணாநிதியிடம் வரதராஜன் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றிருந்தது. அப்போது அவர்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதுநினைவிருக்கலாம்.

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனைநடத்துகிறார். இதில் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பொலிட்பீரோ குழுஉறுப்பினர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக் கட்சியும் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 7 தொகுதிகளில்போட்டியிட்டது.

திருச்சி மாநில மாநாட்டின்போது, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின்எண்ணிக்கையை அறிவிக்கவிருப்பதாக ஏற்கனவே கருணாநிதி தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

எனவே மாநாட்டுக்குள் தொகுதிகளின் எண்ணிக்கையை கருணாநிதி முடிவு செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாமக, மதிமுக,காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தத்திட்டமிட்டுள்ளார்.

இனிமேல் திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பில்லை. இனிமேல் பிரிந்துபோனால் அதற்கு மதிப்பிருக்காது என்ற நிலையை கருணாநிதி மிக விவரமாகஉருவாக்கி விட்டார்.

எனவே இருக்கிற இடங்களை முடிந்த வரை சமரசமாக பகிர்ந்து கொள்வதிலேயேஅனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன.

அதேசமயம் முடிந்தவரை கூடுதலான இடங்களைப் பெறுவதிலும் அனைத்துக்கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

திமுக மாநாடு- நிகழ்ச்சி நிரல்

இதற்கிடையே திருச்சியில் மார்ச் 3ம் தேதி தொடங்கும் திமுகவின் 9வது மாநிலமாநாட்டுக்கான அழைப்பிதழ் வினியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

மிகவும் முக்கியமான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கானஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

வரவேற்புக் குழுத் தலைவரும், திருச்சி மாநகர திமுக செயலாளருமான கே.என்.நேருஅழைப்பு விடுப்பது போல மாநாட்டு அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள மாநாட்டு நிரல் விவரம்:

மார்ச் 3 - வெள்ளிக்கிழமை

- மாலை 4 மணி: திமுக தலைவர் கருணாநிதி கட்சிக் கொடியேற்றுகிறார்.

- சுய மரியாதைச் சுடர் மாடத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணிதிறந்து வைக்கிறார்.

- மாலை 5 மணி: ஸ்டாலின் தலைமையில் மாநில இளைஞர் அணி வெள்ளி விழாமாநாடு தொடங்குகிறது.

மார்ச் 4 - சனிக்கிழமை

- காலை 10 மணி: தலைவர்கள் உரை தொடக்கம்

- இரவு 9 மணி: பொதுச் செயலாளர் அன்பழகன் மாநாட்டுத் திறப்புரை.

மார்ச் 5 - ஞாயிற்றுக்கிழமை

- காலை: தோழமைக் கட்சித் தலைவர்கள் ஆர்.எம். வீரப்பன், ஜவாஹிருல்லா, ராஜ.கண்ணப்பன், டாக்டர் சேதுராமன், அல்தாப், கு.செல்லமுத்து, எஸ்றா சற்குணம்,பி.வி.கதிரவன், பூவை ஜெகன்மூர்த்தி பேசுகிறார்கள்.

- மாலை 4 மணி தொடங்கி - கூட்டணிக் கட்சித் தலைவர்கள் காதர் மொஹைதீன்,தா.பாண்டியன், என்.வரதராஜன், வைகோ, டாக்டர் ராமதாஸ், எம்.கிருஷ்ணசாமிபேசுகிறார்கள்

- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்புரை

- திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரை

கருணாநிதி தனது நிறைவுரையின்போது, சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள்போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த விவரத்தை வெளியிடுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+